பொது செய்தி

தமிழ்நாடு

கத்திகளுடன் காரில் சென்ற ஐந்து பேருக்கு 'காப்பு'

Added : ஆக 31, 2021
Share
Advertisement
திருத்தணி, ஆக. 31-காரில் கத்திகளுடன் சென்ற ஐந்து பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.திருப்பத்துார் மற்றும் காட்பாடி பகுதியைச் சேர்ந்த 26 - 50 வயதுள்ள மொத்தம் ஐந்து பேர் நேற்று மாலை, ஹோண்டா போர்ட் காரில் திருத்தணி வழியாக ஆந்திர மாநிலம் திருப்பதி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.அப்போது திருத்தணி அருகே, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, ஆசிரியர் நகர் பகுதியில் வாகன

திருத்தணி, ஆக. 31-

காரில் கத்திகளுடன் சென்ற ஐந்து பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.திருப்பத்துார் மற்றும் காட்பாடி பகுதியைச் சேர்ந்த 26 - 50 வயதுள்ள மொத்தம் ஐந்து பேர் நேற்று மாலை, ஹோண்டா போர்ட் காரில் திருத்தணி வழியாக ஆந்திர மாநிலம் திருப்பதி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.அப்போது திருத்தணி அருகே, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, ஆசிரியர் நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த திருத்தணி போலீசார், மேற்கண்ட காரை மடக்கி சோதனை செய்தனர்.காரில் மூன்று கத்திகள், அரிசி, பருப்பு போன்ற பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.மேலும், காரில் வந்த ஐந்து பேரையும் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் திருப்பதியில் செம்மரங்களை வெட்டுவதற்கு சென்றதாக தெரிய வந்தது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X