பொது செய்தி

தமிழ்நாடு

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தையல் மிஷின், கடன் வழங்கல்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
திருப்போரூர் : காயார் கிராம வனக்குழு மூலம், பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் மற்றும் கடன் உதவி, நேற்று வழங்கப்பட்டது.திருப்போரூர் அடுத்த காயார் கிராமத்தில், வனக்குழு துவங்கப்பட்டு, அதன் உறுப்பினர்களுக்கு சிறு தொழில், பொருளாதாரம் மேம்பட கடனுதவி வழங்கப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் 3,212 பேருக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.அதேபோல் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி, காயாரில்
 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தையல் மிஷின், கடன் வழங்கல்

திருப்போரூர் : காயார் கிராம வனக்குழு மூலம், பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் மற்றும் கடன் உதவி, நேற்று வழங்கப்பட்டது.

திருப்போரூர் அடுத்த காயார் கிராமத்தில், வனக்குழு துவங்கப்பட்டு, அதன் உறுப்பினர்களுக்கு சிறு தொழில், பொருளாதாரம் மேம்பட கடனுதவி வழங்கப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் 3,212 பேருக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.அதேபோல் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி, காயாரில் நேற்று நடந்தது. வனக்குழு தலைவர் மோகனராமன், திருப்போரூர் வனசரக அலுவலர் கல்யாண் ஆகியோர், மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 18 பேருக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. நான்கு பெண்களுக்கு தலா 5,000 ரூபாய் வீதம் 20 ஆயிரம் ரூபாய் என, மொத்தம் 2 லட்சம் ரூபாய்க்கு கடன்உதவி வழங்கப்பட்டது. கிராம மக்கள், வனக்குழு உறுப்பினர்கள், வனசரக அலுவலக ஊழியர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X