பொது செய்தி

தமிழ்நாடு

பாலாற்றில் 4வது தடுப்பணைக்கு அரசாணை எப்போது என கேள்வி

Added : ஆக 31, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : பாலாற்றில், மூன்று தடுப்பணைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், வெங்கடாவரம் தடுப்பணைக்கு, எப்போது அரசாணை வெளியிடப்படும் என, விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.ஒருங்கிணைந்த காஞ்சி புரம் மாவட்டமாக இருந்தபோது, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா, 2017ல் கொண்டாடப்பட்டது. அப்போது, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வந்த, முன்னாள் முதல்வர் பழனிசாமி

காஞ்சிபுரம் : பாலாற்றில், மூன்று தடுப்பணைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், வெங்கடாவரம் தடுப்பணைக்கு, எப்போது அரசாணை வெளியிடப்படும் என, விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஒருங்கிணைந்த காஞ்சி புரம் மாவட்டமாக இருந்தபோது, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா, 2017ல் கொண்டாடப்பட்டது. அப்போது, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வந்த, முன்னாள் முதல்வர் பழனிசாமி பாலாற்றில் ஏழு தடுப்பணைகள் கட்டப்படும் என, அறிவித்தார்.அதன்படி, முதலாவதாக, ஈசூர் - வள்ளிபுரம் பகுதியில், 28 கோடி ரூபாய் மதிப்பில், முதல் தடுப்பணை கட்டப்பட்டது.இதையடுத்து, வாயலுார் தடுப்பணை, கல்பாக்கம் அணுமின் நிலைய பங்களிப்போடு, 33 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டது.பின், உள்ளாவூர் தடுப்பணை, 42 கோடி ரூபாய் ரூபாயில், 90 சதவீதம் நிறைவடைந்து, இறுதி கட்டத்தில் உள்ளது. மற்ற தடுப்பணைகள் கட்டும் பணியை துவங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் கூறியதாவது:அ.தி.மு.க., ஆட்சியில், மூன்று தடுப்பணைகளுக்கு அரசாணை வெளியிட்டு, தடுப்பணைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.தி.மு.க., ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், மீதமுள்ள உதயம்பாக்கம், பாலுார், வெங்குடி, வெங்கடாவரம் ஆகிய நான்கு இடங்களில், தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.அடுத்ததாக, வெங்கடாவரம் தடுப்பணை கட்டப்பட்டால், காஞ்சிபுரம் நகராட்சிக்கு தண்ணீர் கிடைக்கும். வடகிழக்கு பருவமழைக்கு முன் தடுப்பணை பணிகள் நடக்க வேண்டும். தி.மு.க., அரசு, பாலாற்றில் தடுப்பணை கட்ட, அரசாணை வெளியிட்டு, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X