பொது செய்தி

இந்தியா

ஆன்லைன்' விண்ணப்ப கெடு நீட்டிப்பு; வரி செலுத்துவோர் கோரிக்கை ஏற்பு

Updated : ஆக 31, 2021 | Added : ஆக 31, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி,-வருமான வரிச் சட்டத்தின் கீழ், வரி விலக்கு பெறுவது உள்ளிட்டவை தொடர்பான விண்ணப்பங்களை, 'ஆன்லைன்' வாயிலாக தாக்கல் செய்வதற்கான கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.சமீபத்தில், வருமான வரித் துறை வலைதளம் புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்தது. ஆனால், அதில் தொடர்ச்சியாக ஏற்படும் கோளாறு காரணமாக, ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிப்பதில் கடும் சிரமம்

புதுடில்லி,-வருமான வரிச் சட்டத்தின் கீழ், வரி விலக்கு பெறுவது உள்ளிட்டவை தொடர்பான விண்ணப்பங்களை, 'ஆன்லைன்' வாயிலாக தாக்கல் செய்வதற்கான கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.latest tamil news


சமீபத்தில், வருமான வரித் துறை வலைதளம் புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்தது. ஆனால், அதில் தொடர்ச்சியாக ஏற்படும் கோளாறு காரணமாக, ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், 'வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது, வரி விலக்கு கோரி விண்ணப்பிப்பது உள்ளிட்டவற்றுக்கான கெடுவை தள்ளி வைக்க வேண்டும்' என, வரி செலுத்துவோர் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இது குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஆன்லைன் வாயிலாக வருமான வரி தொடர்பான விண்ணப்பங்களை தாக்கல் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக, வரி செலுத்துவோர் தெரிவித்துள்ளனர்.அவர்களின் கோரிக்கையை ஏற்று, வருமான வரிச் சட்டத்தின் கீழ், ஒரு சில விண்ணப்பங்களை ஆன்லைன் வாயிலாக தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, வருமான வரிச் சட்டம் 80ஜி பிரிவின் கீழ், 10 ஏ படிவத்தில் வரி விலக்கு பெற பதிவு செய்ய அல்லது விண்ணப்பிப்பதற்கான கெடு 2022 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதேபோல, 10ஏபி., படிவத்தின் கீழ் விண்ணப்பிக்க 2022 மார்ச் 31 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு, ஏப்., - ஜூன் காலாண்டு வரையிலான வருவாய் விபரத்திற்கு, படிவம் 15ஜி/15எச் விண்ணப்பங்களை அளிப்பதற்கான கெடு நவ., 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


இந்த கெடு, ஜூலை - செப்., காலாண்டிற்கான வருவாய் விண்ணப்பத்திற்கு டிச., 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கடந்த 2020 - 21ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கலுக்கான கெடு செப்., 30ம் தேதியுடன் முடிவடைகிறது.இந்த காலக் கெடுவை நீட்டிப்பது தொடர்பாக, மத்திய நிதியமைச்சகத்தின் அறிக்கையில் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Chennai ,இந்தியா
31-ஆக-202108:59:56 IST Report Abuse
Raj It's a software failure. Not Govt. Don't wear yellow glass always
Rate this:
Cancel
Ramanujam Veraswamy - Madurai,இந்தியா
31-ஆக-202106:05:42 IST Report Abuse
Ramanujam Veraswamy It is not response of the Govt to the request of IT assesses. It is an admission of failure of the Govt to install bug free software, even after sping Rs. 4242 crorre (Info).
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X