பொது செய்தி

தமிழ்நாடு

காட்டுப்பன்றிகளை விரட்ட வயலில் வண்ண கோணிகள்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியம், காரியமங்கலம் ஊராட்சியைச் சுற்றியுள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை கட்டுப் படுத்த வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உத்திரமேரூர் ஒன்றியம், காரியமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டுக்கொல்லை, மேட்டுக்கொல்லை உள்ளிட்ட கிராமங்களில் நெல், வேர்க்கடலை பயிரிடப்பட்டுள்ளன.
 காட்டுப்பன்றிகளை விரட்ட வயலில் வண்ண கோணிகள்

உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியம், காரியமங்கலம் ஊராட்சியைச் சுற்றியுள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை கட்டுப் படுத்த வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உத்திரமேரூர் ஒன்றியம், காரியமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டுக்கொல்லை, மேட்டுக்கொல்லை உள்ளிட்ட கிராமங்களில் நெல், வேர்க்கடலை பயிரிடப்பட்டுள்ளன. இந்நிலங்களில் உள்ள நெற்கதிர் மற்றும் வேர்க்கடலை செடிகளை, இரவில் கூட்டமாக வரும் காட்டு பன்றிகள், பயிர்களை நாசம் செய்வதோடு, நிலத்தை சேதப்படுத்துகின்றன.

இதனால், விவசாயிகள், வயல்வெளியை சுற்றிலும் வண்ண கோணி பைகளை குச்சியில் கட்டி நட்டு வைத்துள்ளனர்.இருப்பினும், காட்டுப்பன்றிகள் பயிர்களை நாசம் செய்வதால், மீண்டும் பயிரிட முடியாத நிலை உள்ளதாக, விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த, வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X