பொது செய்தி

இந்தியா

மக்கள் மனதில் பாஜ., உள்ளது

Added : ஆக 31, 2021
Share
Advertisement
தங்கவயல் : ''தங்கவயல் மேம்பட முழுமையான அக்கறை காட்டுவது பா.ஜ., மட்டும் தான். சேவைக்காக போட்டியிடுகிறேன். ஓட்டுக்கு பணம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. நேர்மையாக தேர்தலை சந்திக்க விரும்புகிறோம். மக்கள் மனதில் பா.ஜ., உள்ளது,'' என, 12 வது வார்டு இடைத்தேர்தலில் பா.ஜ., வேட்பாளர் நந்தினி தேவி தெரிவித்தார்.தங்கவயல் 12 வது வார்டு இடைத்தேர்தலில் பா.ஜ.,வில் போட்டியிடுபவர், நந்தினி
மக்கள் மனதில் பாஜ., உள்ளது

தங்கவயல் : ''தங்கவயல் மேம்பட முழுமையான அக்கறை காட்டுவது பா.ஜ., மட்டும் தான். சேவைக்காக போட்டியிடுகிறேன். ஓட்டுக்கு பணம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. நேர்மையாக தேர்தலை சந்திக்க விரும்புகிறோம்.

மக்கள் மனதில் பா.ஜ., உள்ளது,'' என, 12 வது வார்டு இடைத்தேர்தலில் பா.ஜ., வேட்பாளர் நந்தினி தேவி தெரிவித்தார்.தங்கவயல் 12 வது வார்டு இடைத்தேர்தலில் பா.ஜ.,வில் போட்டியிடுபவர், நந்தினி தேவி, 35. இவரது கணவர், சமூக ஆர்வலர் ஜஸ்டின். இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.தேர்தலை ஒட்டி, நமது நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி :முதல் தேர்தலின் அனுபவம் எப்படி?கடந்த முறை, 12வது வார்டில் முதன் முறையாக கடந்த முறை சுயேச்சையாக போட்டியிட்டேன்.

வாக்காளர்களின் அணுகுமுறைகளை பயிற்சி பெற்றேன். கணிசமான ஓட்டுகள் பெற்றேன்; ஆயினும் தோல்வி அடைந்தேன். சாதக, பாதகங்களை அறிந்துக் கொண்டேன்.உங்கள் செல்வாக்கு எப்படி?நான் பிறந்து, வளர்ந்து வாழுமிடம் இதே பகுதி. எனக்கு புதிய இடமல்ல. எல்லாருமே அறிமுகமானவர்கள். அனைவரையும் உறவினர்களாக கருதுகிறேன். என்னை அவர்களின் வீட்டு மகளாக பார்க்கின்றனர்.

அதுதான் எனது செல்வாக்கு.சமூக ஆர்வலர் சுயேச்சையான உங்களுக்கு பா.ஜ., டிக்கெட் கிடைத்தது எப்படி?என் கணவர் ஜஸ்டின், சமூக ஆர்வலர். பா.ஜ., ஆதரவாளர். 20 ஆண்டுகளாக மூடி கிடந்த தங்கச் சுரங்க மருத்துவமனையை மீண்டும் திறக்க, கோலார் தொகுதி எம்.பி., முனிசாமி முயற்சித்தபோது, தன்னார்வ தொண்டர்களில் ஒருவராக என் கணவரும் ஆர்வம் காண்பித்தார்.சமூக அக்கறையை பார்த்து,

12 வது வார்டில் பெண்கள் ஒதுக்கீடு உள்ள இடைத் தேர்தலில் எனக்கு சீட் கொடுத்தனர். எனக்கு மேலும் உற்சாகம் ஏற்பட்ள்ளது.பா.ஜ.,வினரின் ஓட்டு சேகரிப்பு எப்படி?கோலார் லோக்சபா தொகுதி, மாநில, மத்திய அரசுகள் பா.ஜ., வசம் உள்ளது. 12 வது வார்டு உள்ள தங்கச்சுரங்க பகுதியின் இடைத் தேர்தலில் பா.ஜ., வெற்றிப் பெற, கட்சியினர் முழு மூச்சாக களத்தில் இறங்கி உள்ளனர்.

மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளை விளக்கி ஓட்டு சேகரிக்கின்றனர். புதிய மாற்றத்தை எதிர்ப்பார்த்து, பா.ஜ.,வுக்கு மக்கள் ஆதரவளிப்பர் என நம்புகிறேன்.பா.ஜ., தான் காரணம் தங்கவயலுக்கும், இந்த வார்டுக்கும் பா.ஜ.,வால் என்ன பயன்?தங்கச் சுரங்க தொழிலாளர்களுக்கென இருந்த மருத்துவமனை மூடிய போது, யாரும் திறக்க முயற்சி எடுக்கவில்லை.

3இம்மருத்துவமனையை திறக்க பா.ஜ., தான் காரணம். இதே மருத்துவமனையில் சி.டி., ஸ்கேனிங், எம்.ஆர்.ஐ., ஸ்கேனிங், உள்பட நவீன தொழில்நுட்ப வசதிகள் விரைவில் ஏற்படுத்தப்படவுள்ளது. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படுகிறது. இவைகளை விளக்கி ஓட்டு சேகரிக்கின்றோம்.நகர வளர்ச்சி பணியில் உங்கள் செயல்பாடு என்ன?மத்திய பா.ஜ., அரசு, 165 கோடி ரூபாயில் அம்ருத் சிட்டி திட்டம் அமல்படுத்தியது. அந்த நிதியால் சுரங்க குடியிருப்பு பகுதி மேம்படுத்தப்படவில்லை. இதில் பெருமளவில் முறைகேடு, ஊழல் நடந்திருக்கு. அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.'ஓட்டுக்கு நோட்டு' என 1,000 முதல் 2,000 ரூபாய் வரை விளையாடுவதாக கூறப்படுகிறதே. உங்கள் தரப்பில் எவ்வளவு?சேவைக்காக போட்டியிட்டு உள்ளேன். ஓட்டுக்கு பணம் தர வேண்டிய அவசியமில்லை.

நேர்மையாக தேர்தலை சந்திக்க விரும்புகிறோம். மக்கள் மனதில் பா.ஜ., உள்ளது. வரும் எந்த தேர்தலாக இருந்தாலும் தங்கவயலில் பா.ஜ., தான் வெற்றி பெறும்.இந்த தேர்தலில் நீங்கள் காணும் சவால் எது?குப்பை அகற்றுதல், சுகாதாரப் பணிகள், குடிநீர், தெரு விளக்கு போன்றவை நகராட்சியோட கடமை, செய்தே ஆக வேண்டும். ஆனால், சவாலாக இருப்பது குடியிருக்கும் வீடுகளை அவரவருக்கு சொந்தமாக்கி வீட்டுரிமை பட்டா கிடைக்க செய்வது பா.ஜ.,வால் மட்டுமே முடியும். அதனை செய்து முடிக்கப்படும். பா.ஜ., எம்.பி., இதன் மீது தீவிரம் காட்டி வருகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X