பொது செய்தி

தமிழ்நாடு

உயர் கோபுர விளக்கு அமைக்க கோரிக்கை

Added : ஆக 31, 2021
Share
Advertisement
மாமல்லபுரம் : புதுப்பட்டினம் புறவழி சந்திப்பு பகுதிகளில், விபத்தை தவிர்க்க, உயர்கோபுர விளக்குகள் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் - புதுப்பட்டினம் பகுதியில், கடந்த ஆண்டு, 2 கி.மீ., தொலைவிற்கு, கிழக்கு கடற்கரை சாலையில் புறவழிப்பாதை அமைக்கப்பட்டது.இப்பாதையில் இளையனார்குப்பத்திலும், புதுப்பட்டினத்திலும், பழைய

மாமல்லபுரம் : புதுப்பட்டினம் புறவழி சந்திப்பு பகுதிகளில், விபத்தை தவிர்க்க, உயர்கோபுர விளக்குகள் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் - புதுப்பட்டினம் பகுதியில், கடந்த ஆண்டு, 2 கி.மீ., தொலைவிற்கு, கிழக்கு கடற்கரை சாலையில் புறவழிப்பாதை அமைக்கப்பட்டது.

இப்பாதையில் இளையனார்குப்பத்திலும், புதுப்பட்டினத்திலும், பழைய உட்புற சாலை இணைந்து, முக்கிய சந்திப்பு பகுதிகள் உள்ளன. இப்பகுதியினர், புறவழி சந்திப்புகளில் தொடர்ந்து கடக்கின்றனர்.இரு பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், கிழக்கு கடற்கரை சாலையில் நுழைய முயலும்போது, அச்சாலையில் வேகமாக செல்லும் வாகனங்களால் விபத்தில் சிக்குகின்றன.குறிப்பாக இரவில், சந்திப்பு பகுதிகளில் சூழ்ந்த இருளில் கடக்க இயலாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.எனவே சந்திப்பு பகுதிகளில் விபத்தை தவிர்க்க, உயர்கோபுர விளக்குகள் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X