பொது செய்தி

இந்தியா

யாருடைய துறைகளும் மாற்றப்படாது; அருண்சிங்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
பெங்களூரு : யாருடைய துறைகளும் மாற்றப்படாது என்று பா.ஜ., மேலிட பொறுப்பாளர் அருண்சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதால், எதிர்பார்ப்பில் இருந்த அதிருப்தி அமைச்சர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழாவுக்கு, பா.ஜ., மேலிட பொறுப்பாளர் அருண்சிங் பெங்களூரு வந்திருந்தார். அதன் பின், மூன்று வாரங்களுக்கு பின் நேற்று மீண்டும்

பெங்களூரு : யாருடைய துறைகளும் மாற்றப்படாது என்று பா.ஜ., மேலிட பொறுப்பாளர் அருண்சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதால், எதிர்பார்ப்பில் இருந்த அதிருப்தி அமைச்சர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழாவுக்கு, பா.ஜ., மேலிட பொறுப்பாளர் அருண்சிங் பெங்களூரு வந்திருந்தார். அதன் பின், மூன்று வாரங்களுக்கு பின் நேற்று மீண்டும் டில்லியிலிருந்து பெங்களூரு வந்தார்.அவர் கூறியதாவது:கர்நாடக அமைச்சரவையில் காலியாக உள்ள நான்கு பதவிகள் நிரப்புவது குறித்து முதல்வர் பசவராஜ் பொம்மை தான் முடிவு செய்வார்.கட்சி மேலிடம் சில ஆலோசனை மட்டுமே வழங்கும். விஜயேந்திரா சாணக்கியத்தனமான இளம் அரசியல் தலைவர். அவரது செயல்பாடு குறித்து நன்கு தெரியும்.

தற்போது கட்சியின் மாநில துணை தலைவராக உள்ளார். அவருக்கு கட்சி மேலிடம் உரிய நேரத்தில் தகுந்த பதவி வழங்கும். பதவி கேட்டு, முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி என்னை சந்திக்கவில்லை.எந்த பலனும் எதிர்பார்க்காமல் லட்சக்கணக்கான தொண்டர்கள் கட்சி வளர்ச்சிக்கு பணியாற்றுகின்றனர். அவர்களுக்கிடையில் சிலருக்கு மட்டுமே அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.கொடுத்திருக்கும் துறைகளில் திறம்பட நிர்வகிட்டும். யாருடைய துறையும் மாற்றப்படாது.பழைய மைசூரு மண்டலத்தில் கட்சியை பலப்படுத்த வேண்டும்.

இதற்காக கர்நாடகா வந்துள்ளேன். மைசூரு, ஹாசன், மாண்டியா, பெங்களூரு ஆகிய மாவட்டங்களில் கட்சி வளர்ச்சி குறித்து பிரமுகர்களுடன் ஆலோசிக்கப்படும்.அடுத்த தேர்தலில் பழைய மைசூரு மண்டலத்தில் அதிக தொகுதிகளில் வென்றால், சுலபமாக ஆட்சி அமைக்க முடியும்.முன்னாள் முதல்வர் எடியூரப்பா, கர்நாடகாவின் செல்வாக்குமிக்க தலைவர். மாநிலத்தின் ஒவ்வொரு மூலைக்கும் சென்று கட்சியை வளர்த்தவர். அங்கு மாநில சுற்றுப்பயணம் மேற்கொண்டால் கட்சிக்கு தான் நல்லது.இவ்வாறு அவர் கூறினார்.யாருடைய துறைகளும் மாற்றப்படாது என்று பா.ஜ., மேலிட பொறுப்பாளர் அருண் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதால், அமைச்சர்கள் ஆன்ந்த் சிங், ஸ்ரீராமுலு, எம்.டி.பி.நாகராஜ் உட்பட பலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X