கழுத்தை நெரித்து கணவன் கொலை: காதல் மனைவி, கள்ளக்காதலன் கைது

Added : ஆக 31, 2021
Share
Advertisement
வில்லியனுார்-வில்லியனுார் அருகே,கணவன் கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவி, கள்ளக் காதலனுடன் கைது செய்யப்பட்டார்.தஞ்சாவூரை சேர்ந்தவர் சந்திரசேகர்,43. இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு, புதுச்சேரி வினோபா நகரில் உள்ள அப்பள கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். அதே கம்பெனியில் வேலை செய்த, நாவற்குளம் பகுதியை சேர்ந்த தவமணி,35, என்பவருடன் காதல் ஏற்பட்டது. இதனையறிந்த குடும்பத்தினர்,

வில்லியனுார்-வில்லியனுார் அருகே,கணவன் கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவி, கள்ளக் காதலனுடன் கைது செய்யப்பட்டார்.தஞ்சாவூரை சேர்ந்தவர் சந்திரசேகர்,43. இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு, புதுச்சேரி வினோபா நகரில் உள்ள அப்பள கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். அதே கம்பெனியில் வேலை செய்த, நாவற்குளம் பகுதியை சேர்ந்த தவமணி,35, என்பவருடன் காதல் ஏற்பட்டது. இதனையறிந்த குடும்பத்தினர், தவமணிக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து, நிச்சயித்தனர்.குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி, 17 வருடத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய தவமணி, காதலன் சந்திரசேகரை திருமணம் செய்துகொண்டார். இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இருவரும், வினோபா நகர் பகுதியிலேயே தனியாக அப்பள கம்பெனி துவக்கினர்.வில்லியனுார் அருகே அரசூர் ராஜா நகரில் மனை வாங்கி மூன்று குடியிருப்புகளை கொண்ட மாடி வீடு கட்டி குடியேறினர்.இந்நிலையில், கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு அரசூர் சாலையில் உள்ள கறிக்கடையில் கறி வாங்க சென்ற தவமணிக்கும், கடை ஊழியரான திண்டுக்கல்லைச் சேர்ந்த அஜிமீர்கான்,23, என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் கள்ளக் காதலாக மாறி, பல்வேறு இடங்களில் தனிமையில் இருந்துள்ளனர்.கொரோனா ஊரடங்கால் கறிக்கடை மூடப்பட்டதால், அஜிமீர்கான் திண்டுக்கல் சென்று விட்டார். தவமணி தொடர்ந்து செல்போனில் பேசி வந்ததால் சந்திரசேகருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால், கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.கடந்த 10 நாட்களுக்கு முன், அரசூர் வந்த அஜிமீர்கான், சந்தேகம் வராதபடி சந்திரசேகர் வீட்டிலேயே வாடகைக்கு குடியேறினார். கறிக்கடையில் வேலை இல்லை என கூறி, சந்திரசேகரின் அப்பள கம்பனியில் பணிக்கு சேர்ந்தார். இதனால், தவமணியின் கள்ளக் காதல் மேலும் வலுவடைந்தது.கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்த சந்திரசேகரை கொலை செய்ய, இருவரும் திட்டம் தீட்டினர். நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியறையில் படுத்திருந்த சந்திரசேகரை, இருவரும் சேர்ந்து தலையணையால் முகத்தை அழுத்தியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தனர்.துாக்கத்திலேயே சந்திரசேகர் இறந்துவிட்டதாக போலீசுக்கு தவமணி தகவல் தெரிவித்தார்.சந்திரசேகர் உடலை கைப்பற்றி, அஜிமீர்கான் உதவியுடன் ஆம்புலன்சில் கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அஜிமீர்கான், அங்கிருந்து திடீரென மாயமானார்.இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பிரேத பரிசோதனையில் கழுத்தை நெரித்து கொலை செய்தது உறுதியானது.விசாரணையில், கள்ளக்காதலன் அஜிமீர்கானுடன் சேர்ந்து, கணவர் சந்திரசேகரை கொலை செய்ததை தவமணி ஒப்புக் கொண்டார். தவமணியை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.திண்டுக்கல் பகுதியில் பதுங்கி இருந்த அஜிமீர்கானை நேற்று மாலை போலீசார் பிடித்து புதுச்சேரிக்கு அழைத்து வந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X