சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடும்பத்தை இழந்து கதறிய முதியவர்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
தியாகதுருகம்-தியாகதுருகத்தில் 6 பேர் இறந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை இழந்து தவிக்கும் முதியவரின் கதறல் சோகத்தை ஏற்படுத்தியது.சென்னை, கீழ்கட்டளை பகுதியைச் சேர்ந்தர் ராஜேந்திரன், 65; தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மனைவி ஜெசி, 60; மகள்கள் மோனிகா, 32; ரபேக்காள், 22; மோனிகாவின் கணவர் சங்கர் ஸ்வீடன் நாட்டில் பணிபுரிகிறார். இவர்களின் மகன்

தியாகதுருகம்-தியாகதுருகத்தில் 6 பேர் இறந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை இழந்து தவிக்கும் முதியவரின் கதறல் சோகத்தை ஏற்படுத்தியது.சென்னை, கீழ்கட்டளை பகுதியைச் சேர்ந்தர் ராஜேந்திரன், 65; தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மனைவி ஜெசி, 60; மகள்கள் மோனிகா, 32; ரபேக்காள், 22; மோனிகாவின் கணவர் சங்கர் ஸ்வீடன் நாட்டில் பணிபுரிகிறார். இவர்களின் மகன் ஜோஷ்வா, 12;மோனிகா, ஊட்டியில் வாங்கிய நிலத்தை, பத்திரப்பதிவு செய்ய 26ம் தேதி சென்னையில் இருந்து 'மகிந்திரா எக்ஸ்யூவி' காரில் புறப்பட்டார். அவருடன் தாய் ஜெசி, சகோதரி ரபேக்காள், மகன் ஜோஷ்வா மற்றும் இவரது குடும்ப நண்பர்களான காஞ்சிபுரம் மாவட்டம், செம்பாக்கம் சத்தியமூர்த்தி மகன்கள் இமானுவேல், 26; எபினேசர் பெஞ்சமின், 22; ஆகியோர் உடன் சென்றனர்.ஊட்டியில் பணிகளை முடித்து விட்டு நேற்று முன்தினம் 29ம் தேதி சென்னை திரும்பினர். இமானுவேல் காரை ஓட்டினார். இரவு 8:00 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் புறவழிச்சாலை சந்திப்பு அருகே காரின் முன்பக்க இடதுபுற டயர் வெடித்தது. இதில் கார் நான்கு வழிச்சாலையின் சென்டர் மீடியனைக் கடந்து பக்கத்தில் உள்ள சாலைக்குள் நுழைந்தது. அப்போது எதிர் திசையில் சென்னையில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற அரசு பஸ், கார் மீது பயங்கரமாக மோதியது.பஸ் சக்கரத்தின் அடியில் கார் சிக்கிய நிலையில், 50 அடி துாரம் இழுத்துச் செல்லப்பட்டு அருகில் உள்ள 10 அடி ஆழ பள்ளத்தில் இறங்கியது. இவ்விபத்தில் காரில் சென்ற 6 பேரும் உடல் நசுங்கி இறந்தனர்.போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் 3 மணி நேரம் போராடி 6 பேரின் உடலை மீட்டனர். இறந்தவர்களின் உடல்கள் நேற்று பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது மனைவி, இரு மகள்கள், பேரன் என 4 பேரை விபத்தில் பறிகொடுத்த முதியவர் ராஜேந்திரன் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.பழுதான கேமரா

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X