பொது செய்தி

இந்தியா

12வது வார்டில் பிக் பிஸ்னஸ்காரங்க வேட்டை

Added : ஆக 31, 2021
Share
Advertisement
'பிக்' பிஸ்னஸ்காரங்க வேட்டை!நகராட்சி 12வது வார்டில் அரை டஜன் வேட்பாளர்கள் நிற்கின்றனர். இதில புதுமுகமா 3 பேரு; ஏற்கனவே தேர்தலை சந்தித்து தோற்றவங்க 3 பேரு.புதுமுகங்கள், புது அனுபவத்தோடு தேர்தலை சந்திக்கிறாங்க. ஏற்கனவே தோற்றவங்க பழைய அனுபவத்தோடு சவாலை சந்திக்கிறாங்க.மெழுகுவர்த்தி சின்னத்து தாய்க்குலம், உருக்கமா பேசி ஓட்டு கேட்டாரு. இவருக்கு ஆதரவா காரு, கப்பலு, மைன்ஸ்

'பிக்' பிஸ்னஸ்காரங்க வேட்டை!நகராட்சி 12வது வார்டில் அரை டஜன் வேட்பாளர்கள் நிற்கின்றனர். இதில புதுமுகமா 3 பேரு; ஏற்கனவே தேர்தலை சந்தித்து தோற்றவங்க 3 பேரு.புதுமுகங்கள், புது அனுபவத்தோடு தேர்தலை சந்திக்கிறாங்க. ஏற்கனவே தோற்றவங்க பழைய அனுபவத்தோடு சவாலை சந்திக்கிறாங்க.மெழுகுவர்த்தி சின்னத்து தாய்க்குலம், உருக்கமா பேசி ஓட்டு கேட்டாரு.

இவருக்கு ஆதரவா காரு, கப்பலு, மைன்ஸ் இரும்பு 'பிக்' பிஸ்னஸ் காரர்கள், கோதாவில் இறங்கி இருக்காங்க. இதுதான் மத்தவங்களை திணற வெச்சிருக்கு.பாலிவுட் 'பிக் பி' உடைய வெளிநாட்டு காரை வாங்கிய மெகா தொழிலதிபர் கூட மெழுகு வர்த்திக்கு ஓட்டு சேகரிக்கிறாரு. இரவு நேர ஓட்டு வியாபாரம் ஜோரா நடக்கும்னு மத்தவங்களுக்கு நடுக்கம் வந்திருக்குதாம்!'நெகட்டிவ்' தகவல்கள்!மாவட்ட மந்திரி பதவியேற்று சந்திக்கிற முதல் தேர்தல், கோல்டு சிட்டியின் நகராட்சி இடைத் தேர்தலாகும்.அசம்பிளி தேர்தலையே அலறவிட்ட முனி., மாவட்ட பொறுப்பு மந்திரியாக இருக்கிறாரு.

எப்படியாவது இடைத் தேர்தலில் ஜெயிக்க வைக்க, கோல்டு சிட்டிக்கு வந்தாரு.நம்பிக்கையானவங்களை விசாரிச்சாரு. ஜெயிக்க வைக்க 'பிளான்' கேட்டாரு. திருப்தியான ரிசல்ட் கிடைக்கலையாம்.நெகட்டிவ்வான பதில்களே வந்திருக்கு. ஓட்டுக்கு பட்டுவாடா செய்வதால், பயனில்லை என சிலர் மகுடி ஊதி இருக்காங்க.இப்புடி இருந்தா எப்புடிதான்னு வேட்பாளருக்காக உழைக்கிறவங்க சோர்வாயிட்டாங்களாம்.ஓட்டு வேட்டையாட இருந்த மந்திரி, ஆலோசனை கூட்டம் நடத்தி வெளியேறிட்டாரு. அவர் தெரு தெருவாக போய் ஓட்டுக்கேட்கல. பல 'எல்' வழங்க இருந்தவரின் மனசை கெடுத்துட்டாங்களாம்!ஓட்டா, வேட்டா?ஆறு மாசமா திட்டம் போட்டு பல வளர்ச்சி பணிகளை செய்து வந்தவருக்கு வார்டு ஜனங்க ஆதரவு இருப்பதாக பேச வெச்சாங்க. மூடை அரிசி, உணவு பொருளெல்லாம் கொடுத்தாரு.தேர்தல் நாள் அறிவிக்கிறதுக்கு முன்னதாகவே, 'அட்வான்ஸ் புக்கிங்' செய்தாரு.பஞ்சாயத்துகாரங்க எல்லாம் பக்கபலமாக இருந்தாங்க.

இதனால் தான் விறு விறுப்பா வேலைகளை செஞ்சாரு.ஆனா, இப்போ இவர் போல மேலும் ஐந்து பேரு லேசா... ஐ லேசா போடுறாங்க. கண்ணுல நோட்டு காட்றாங்க.யாரையும் நம்புவதற்கு இல்லையேன்னு புலம்பல் ஆரம்பம் ஆயிடுச்சு.3 மாசத்தில் மாற்றம் வரும்!இடைத் தேர்தலில் 'குட் ரிசல்ட்' வழங்கினா, நெறைய ஓட்டைகள் இருக்கிற நகராட்சியில மூணே மாசத்தில பெரிய மாற்றம் ஏற்படும். இதுக்கப்புறம் அசம்பிளி எலக் ஷனிலும் புது திருப்பம் நடக்கும்னு 'மாஜி' நகராட்சி தலைவரு அதிரடி பிரச்சாரம் செய்து வராரு.முனிசி., முனி., தலைவர் பதவியை கெட்டிப்படுத்த கைக்கார வேட்பாளரை எப்படியேனும் ஜெயிக்க வைக்கனும்னு வார்டு முழுதும் ஓட்டுக்கு வேட்டையாடுறாரு!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X