சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீடு மீது மோதி தொங்கிய கார்; பெண் உட்பட 7 பேர் படுகாயம்

Added : ஆக 31, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பரங்கிப்பேட்டை,-கூரை வீட்டின் மீது இனோவா கார் மோதி அந்தரத்தில் தொங்கிய விபத்தில், ஒரு பெண் உட்பட 7 பேர் படுகாயமடைந்தார்.கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டை அகரம் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது உறவினர் கஜேந்திரன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை, பார்க்க குணசேகரனின் உறவினர்கள் அகரம் பகுதியை சேர்ந்த சதீஷ், 31; கஜமூர்த்தி, 30;
 வீடு மீது மோதி தொங்கிய கார்; பெண் உட்பட 7 பேர் படுகாயம்

பரங்கிப்பேட்டை,-கூரை வீட்டின் மீது இனோவா கார் மோதி அந்தரத்தில் தொங்கிய விபத்தில், ஒரு பெண் உட்பட 7 பேர் படுகாயமடைந்தார்.

கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டை அகரம் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது உறவினர் கஜேந்திரன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை, பார்க்க குணசேகரனின் உறவினர்கள் அகரம் பகுதியை சேர்ந்த சதீஷ், 31; கஜமூர்த்தி, 30; சிவக்குமார், 35; சாந்தி, 50; கார்த்தி, 27; அறிவழகன், 42; ஆகியோர் நேற்று முன் தினம் இனோவா காரில் சென்றனர். காரை மகேந்திரன், 40; என்பவர் ஓட்டினார்.

நேற்று முன் தினம் மாலை 6.30 மணிக்கு பரங்கிப்பேட்டை அடுத்த கரிக்குப்பம் வளைவில் கார் திரும்பும் போது, சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. அதே வேகத்தில் அருகிலிருந்த கூரை வீட்டின் மீது மோதிய கார், அந்தரத்தில் தலைகீழாக தொங்கி நின்றது.இந்த விபத்தில், கார் டிரைவர் மகேந்திரன் உட்பட 7 பேரும் படுகாயமடைந்து, சிதம்பரம் அண்ணாமலைநகர ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். டிரைவர் மகேந்திரன் மேல் சிகிச்சைக்கு நேற்று புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் தேவி வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli,வலிமையான இந்திய கண்டம் ,இந்தியா
31-ஆக-202104:41:13 IST Report Abuse
NicoleThomson அவ்ளோ ஸ்பீட் போனார்களா? மகேந்திரன் போன்றோருக்கு டிரைவிங் லைசன்ஸ் கொடுத்த RTO மீது என்ன நடவடிக்கை? பாவம் அந்த வீட்டுக்காரர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X