பொது செய்தி

தமிழ்நாடு

புறக்காவல் மையத்திற்கு பஸ் நிலையத்தில் பூஜை

Added : ஆக 31, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து, பல்வேறு முக்கிய நகரங்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்குகின்றன. மேலும், கோவில் நிறைந்த நகரமாக இருப்பதால், வெளி மாநில மக்களும் வருகின்றனர். இதனால் தினமும் 1,000க்கும் மேற்பட்ட பயணியர் வந்து செல்கின்றனர். திருவிழா, திருமண நாட்களில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த நாட்களில் திருடர்கள்,

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து, பல்வேறு முக்கிய நகரங்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்குகின்றன. மேலும், கோவில் நிறைந்த நகரமாக இருப்பதால், வெளி மாநில மக்களும் வருகின்றனர். இதனால் தினமும் 1,000க்கும் மேற்பட்ட பயணியர் வந்து செல்கின்றனர்.

திருவிழா, திருமண நாட்களில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த நாட்களில் திருடர்கள், பயணியரிடம் தங்கள் கைவரிசையை காட்டி விடுகின்றனர். இதுபோன்ற சம்பவம் நடக்காமல் தவிர்க்க, பேருந்து நிலையத்தில் தற்காலிக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் போலீசார் பற்றாக்குறை காரணமாக, அங்கு யாரும் பணியில் இருப்பதில்லை. மேலும், பேருந்து மோதி அந்த புறக்காவல் நிலையமும் சேதமடைந்தது.

இந்நிலையில் சேதமடைந்த புறக்காவல் நிலையத்தை இடித்து அகற்றி, அதே இடத்தில் புதிய புறக்காவல் நிலையம் கட்ட, நேற்று பூமி பூஜை நடந்தது.போலீஸ் தரப்பில் கூறுகையில், 'தனியார் பங்களிப்பில் ஒரு மாதத்தில் புறக்காவல் நிலையம் கட்டப்படும். அதன் பின், சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்படுவர்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X