பொது செய்தி

தமிழ்நாடு

புதுச்சேரி மீனவர்கள் நுழைவதை தடுக்ககடலுார் கடலில் விடிய விடிய ரோந்து

Added : ஆக 31, 2021
Share
Advertisement
கடலுார்-புதுச்சேரி மீனவர்கள் கடலுாரில் நுழைவதை தடுக்க, கடல் பகுதியில் மீன்வளத்துறை மற்றும் போலீசார் விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டனர்.புதுச்சேரி மாநிலம் நல்லவாடு மற்றும் வீராம்பட்டினம் மீனவ கிராமத்தினரிடையே சுருக்குமடி வலை பயன்படுத்துவது தொடர்பாக 2 நாட்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது.அப்பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரி

கடலுார்-புதுச்சேரி மீனவர்கள் கடலுாரில் நுழைவதை தடுக்க, கடல் பகுதியில் மீன்வளத்துறை மற்றும் போலீசார் விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி மாநிலம் நல்லவாடு மற்றும் வீராம்பட்டினம் மீனவ கிராமத்தினரிடையே சுருக்குமடி வலை பயன்படுத்துவது தொடர்பாக 2 நாட்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது.அப்பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரி சுருக்குமடி வலையை பயன்படுத்தும் மீனவர்கள் நேற்று முன் தினம் கடலுார் மாவட்ட கடல் பகுதிக்குள் படகுகளுடன் நுழைய முயன்றனர். அவர்களை கடலோரக் காவல் குழுமம் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள், கடலிலேயே தடுத்து எச்சரித்து அனுப்பினர். அவர்கள் வராமல் தடுக்க, கடலுார் மாவட்ட மீனவ கிராமங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.அவர்கள் மீண்டும் நுழையாமல் தடுக்க மீன்வளத்துறை உதவி இயக்குனர் தமிழ்மாறன் தலைமையில் ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் மாலை முதல் விடிய விடிய படகுகள் மூலம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X