சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காதலியை மிரட்டிய காதலன் கைது

Added : ஆக 31, 2021
Share
Advertisement
வேப்பூர்-வேப்பூரில் காதலியுடன் எடுத்து கொண்ட போட்டோவை பேஸ்புக்கில் வெளியிடுவதாக கூறி கொலை மிரட்டல் விடுத்த காதலனை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், வேப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மகள் கல்பனா, 19. இவர் காஞ்சிபுரம் மாவட்டம், சங்குவாசத்திரம் பகுதியில் இயங்கும், மொபைல் போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்தார். அங்கு சூப்பர்வைசராக

வேப்பூர்-வேப்பூரில் காதலியுடன் எடுத்து கொண்ட போட்டோவை பேஸ்புக்கில் வெளியிடுவதாக கூறி கொலை மிரட்டல் விடுத்த காதலனை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், வேப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மகள் கல்பனா, 19. இவர் காஞ்சிபுரம் மாவட்டம், சங்குவாசத்திரம் பகுதியில் இயங்கும், மொபைல் போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்தார். அங்கு சூப்பர்வைசராக பணிபுரிந்த ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரைச் சேர்ந்த வினோத்குமார், 26, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்தனர்.அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததை தொடர்ந்து, கல்பனா வேப்பூர் வந்து பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 26ம் தேதி கல்பனாவின் வீட்டிற்கு வினோத்குமார்வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். காதலித்த போது எடுத்த போட்டோவை பேஸ்புக்கில் வெளியிட போவதாக கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து வினோத்குமாரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X