பொது செய்தி

தமிழ்நாடு

காணொலி வாயிலாக போலீஸ் நிலையம் திறப்பு

Added : ஆக 31, 2021
Share
Advertisement
நெய்வேலி-நெய்வேலி அடுத்த சின்னகாப்பான் குளம் கிராமத்தில் ரூ.93 லட்சத்தில் கட்டிய தெர்மல் போலீஸ் நிலையத்தை காணொலி மூலமாக முதல்வர் ஸ்டாலின் திறந்தார்.கடலுார் மாவட்டம் என்.எல்.சி.,நிறுவன எல்லைக்குள் செயல்பட்ட போலீஸ் ஸ்டேஷன்கள், கோர்ட் கட்டடங்கள் போன்ற அனைத்து தமிழக அரசு அலுவலகங்களும் தமிழக எல்லைக்குள் இடமாற்றம் செய்யப்படுகிறது. நெய்வேலி டி.எஸ்.பி.,அலுவலகம், டவுன்ஷிப்

நெய்வேலி-நெய்வேலி அடுத்த சின்னகாப்பான் குளம் கிராமத்தில் ரூ.93 லட்சத்தில் கட்டிய தெர்மல் போலீஸ் நிலையத்தை காணொலி மூலமாக முதல்வர் ஸ்டாலின் திறந்தார்.கடலுார் மாவட்டம் என்.எல்.சி.,நிறுவன எல்லைக்குள் செயல்பட்ட போலீஸ் ஸ்டேஷன்கள், கோர்ட் கட்டடங்கள் போன்ற அனைத்து தமிழக அரசு அலுவலகங்களும் தமிழக எல்லைக்குள் இடமாற்றம் செய்யப்படுகிறது. நெய்வேலி டி.எஸ்.பி.,அலுவலகம், டவுன்ஷிப் மற்றும் மகளிர் போலீஸ் நிலையங்கள் வடக்குத்து கிராம எல்லைக்குள் இடமாற்றம் செய்யப்பட்டது.நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 27 ல் செயல்பட்ட தெர்மல் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றாக நெய்வேலி அடுத்த சின்னகாப்பான் குளம் கிராமத்தில் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் மூலமாக ரூ.93 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டது. இந்த புதிய போலீஸ் ஸ்டேஷனை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.நெய்வேலியில் நடந்த நிகழ்ச்சிக்கு சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ.,தலைமை தாங்கினார். கடலுார் எஸ்.பி.,சக்தி கணேசன், ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர். நெய்வேலி டி.எஸ்.பி.,ராஜேந்திரன் வரவேற்றார். புதிய கட்டடத்தை அமைச்சர் கணேசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தெர்மல் இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான சப் இன்ஸ்பெக்டர்கள் அழகிரி, நடராஜன், ஏட்டுகள் முத்தையன், பாலகிருஷ்ணன், பரசுராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X