சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிணற்றில் நீச்சல் பழகிய மருத்துவ மாணவர் பலி

Added : ஆக 31, 2021
Share
Advertisement
விழுப்புரம்,-கண்டாச்சிபுரம் அருகே கிணற்றில் நீச்சல் கற்றபோது கயிறு அவிழ்ந்ததில் மருத்துவக் கல்லுாரி மாணவர், நீரில் மூழ்கி இறந்தார்.விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த பழவளம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்நாதன் மகன் வல்லவராயன், 20; கோயம்புத்துார் தனியார் மருத்துவக்கல்லுாரியில் டி.பார்ம்., முதலாம் ஆண்டு படித்து வந்தார்.இவரது தம்பி, முத்தமிழ், 18; இருவரும்

விழுப்புரம்,-கண்டாச்சிபுரம் அருகே கிணற்றில் நீச்சல் கற்றபோது கயிறு அவிழ்ந்ததில் மருத்துவக் கல்லுாரி மாணவர், நீரில் மூழ்கி இறந்தார்.விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த பழவளம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்நாதன் மகன் வல்லவராயன், 20; கோயம்புத்துார் தனியார் மருத்துவக்கல்லுாரியில் டி.பார்ம்., முதலாம் ஆண்டு படித்து வந்தார்.இவரது தம்பி, முத்தமிழ், 18; இருவரும் நேற்று மாலை 4:30 மணியளவில் அதே பகுதியில் உள்ள விவசாயி கிணற்றுக்கு நீச்சல் கற்றுக்கொள்ள சென்றனர்.அங்கு, வல்லவராயன் கயிற்றின் ஒரு முனையை மரத்தில் கட்டியும், மற்றொரு முனையை தனது இடுப்பில் கட்டிக் கொண்டும், கிணற்றில் இறங்கி நீச்சல் கற்றுக் கொண்டிருந்தார்.முத்தமிழ், கிணற்று படியில் அமர்ந்திருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக மரத்தில் கட்டியிருந்த இருந்த கயிறு அவிழ்ந்ததில், வல்லவராயன் கிணற்றில் மூழ்கினார்.அதிர்ச்சியடைந்த முத்தமிழ், அளித்த தகவலின் பேரில், வேட்டவலம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று, நீரில் மூழ்கிய வல்லவராயனை மீட்டபோது, அவர் இறந்தது தெரியவந்தது.கண்டாச்சிபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X