பொது செய்தி

தமிழ்நாடு

புதுச்சேரி வழியாக ரயில் போக்குவரத்து சட்டசபையில் அய்யப்பன் வேண்டுகோள்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
கடலுார்-'புதுச்சேரி வழியாக சென்னை-கடலுார் இடையே ரயில் போக்குவரத்து திட்டத்தை மீண்டும் துவக்க வேண்டும்' என, சட்டசபையில் கடலுார் எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசினார். தமிழக சட்டசபையில் அவர் பேசியதாவது:கடலுார் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தியது, கடலுாரில் நவீன வசதியுடன் கூடிய புதிய பஸ் நிலையம் அமைக்கவும், கடலுார் துறைமுகத்தில் 25 லட்சம் மெட்ரிக் டன் சரக்குகளை கையாள

கடலுார்-'புதுச்சேரி வழியாக சென்னை-கடலுார் இடையே ரயில் போக்குவரத்து திட்டத்தை மீண்டும் துவக்க வேண்டும்' என, சட்டசபையில் கடலுார் எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசினார். தமிழக சட்டசபையில் அவர் பேசியதாவது:கடலுார் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தியது, கடலுாரில் நவீன வசதியுடன் கூடிய புதிய பஸ் நிலையம் அமைக்கவும், கடலுார் துறைமுகத்தில் 25 லட்சம் மெட்ரிக் டன் சரக்குகளை கையாள சரக்கு கப்பல் போக்குவரத்து திட்டத்தை தந்ததற்கும், தொகுதி மக்கள் சார்பில் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறேன். கடலுார் தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து தரவும், தொழில்நுட்ப பூங்கா மற்றும் பயணிகள் கப்பல் போக்குவரத்தை மீண்டும் துவங்கவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரி வழியாக சென்னை-கடலுார் ரயில் போக்குவரத்தை துவங்க நடவடிக்கை வேண்டும். கடலுார் தொகுதி தென்னம்பாக்கம் கிராமம் முதல், மதலப்பட்டு வரை செல்லும் மலட்டாற்றின் கரைகளை பலப்படுத்த வேண்டும்.மேலும், கங்கணாங்குப்பம், உச்சிமேடு - குண்டு உப்பலவாடி இடையே பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணையுடன் பாலம், புதுப்பாளையம்- சிதம்பரம் சாலையை இணைக்கும் வகையில் கெடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணையுடன் கூடிய பாலம், மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட்டில் நவீன வசதியுடன் வணிக வளாகம், திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட்டில் நவீன வசதியுடன் வணிக வளாகம், கடலுார் முதுநகர் மணிகூண்டு அருகில் காந்தி மார்க்கெட் பகுதியில் வணிக வளாகம், செம்மண்டலம் மாதா கோவில் அருகே சுற்றுவட்ட மேம்பாலம் உள்ளிட்டவை அமைக்க வேண்டும். சென்னை மெரீனாவுக்கு அடுத்து நீண்ட துார மணல் பரப்பு கொண்ட கடலுார் சில்வர் பீச்சை சுற்றுலாத் தலமாக்க வேண்டும். தேவனாம்பட்டிணம் முதல் துறைமுகம் அக்கரைகோரி வரை கடல் அரிப்பை தடுக்க கல்சுவர் அமைக்க வேண்டும். கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டப் பணிகள், புதைவட மின்சார பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது, கடலுாரில் அடிக்கல் நாட்டிய மருத்துவக் கல்லுாரியை மீண்டும் அமைக்க வேண்டும். இவ்வாறு அய்யப்பன் எம்.எல்.ஏ., பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X