பொது செய்தி

இந்தியா

பஞ்சவடீ கோவிலில் இன்று நடை அடைப்பு

Added : ஆக 31, 2021
Share
Advertisement
புதுச்சேரி-பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் நடை இன்று காலை சாத்தப்படுவதால், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.திண்டிவனம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை, பஞ்சவடீயில், ஆஞ்ஜநேயர் கோவிலை, பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்ட் முழுமையாக நிர்வகித்து வருகிறது.இந்த டிரஸ்ட் அறங்காவல் குழுவின் மூத்த ஆலோசகர் திருமலை ஐயங்காரின் துணைவியார் ருக்மணி நேற்று மாலை இயற்கை

புதுச்சேரி-பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் நடை இன்று காலை சாத்தப்படுவதால், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.திண்டிவனம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை, பஞ்சவடீயில், ஆஞ்ஜநேயர் கோவிலை, பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்ட் முழுமையாக நிர்வகித்து வருகிறது.இந்த டிரஸ்ட் அறங்காவல் குழுவின் மூத்த ஆலோசகர் திருமலை ஐயங்காரின் துணைவியார் ருக்மணி நேற்று மாலை இயற்கை எய்தினார்.அவருக்கு மரியாதை செலுத்தும் பொருட்டு, இக்கோவிலின் நடை இன்று (31ம் தேதி) காலை சாத்தப்படுகிறது. பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.இன்று மாலை 4:00 மணிக்கு மேல், உரிய க்ரம பூஜைகளுக்கு பிறகு, நடை திறக்கப்பட்டு கோவிலில் வழக்கம் போல் பூஜைகள் நடைபெறும்.இத்தகவலை, பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்ட் அறங்காவல் குழு தலைவர் கோதண்டராமன், அறங்காவலர்கள் யுவராஜன், நரசிம்மன், பழனியப்பன், செல்வம் ஆகியோர் கூட்டாக தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X