பொது செய்தி

இந்தியா

அனைவருக்கும் தடுப்பூசியில் முதல் மெட்ரோ நகரம் பெங்களூரு

Added : ஆக 31, 2021
Share
Advertisement
பெங்களூரு : ''நடப்பாண்டு டிசம்பருக்குள் நாட்டிலேயே அனைவருக்கும் தடுப்பூசி போட்ட முதல் மெட்ரோ நகரமாக பெங்களூரு திகழும்,'' என சுகாதார துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்தார்.பெங்களூரில் அவர் நேற்று கூறியதாவது:நாள்தோறும் ஐந்து லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக, கடந்த 25ல் நடந்த சிறப்பு முகாமில், ஒரே நாளில் 10 லட்சம் பேருக்கு

பெங்களூரு : ''நடப்பாண்டு டிசம்பருக்குள் நாட்டிலேயே அனைவருக்கும் தடுப்பூசி போட்ட முதல் மெட்ரோ நகரமாக பெங்களூரு திகழும்,'' என சுகாதார துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்தார்.

பெங்களூரில் அவர் நேற்று கூறியதாவது:நாள்தோறும் ஐந்து லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக, கடந்த 25ல் நடந்த சிறப்பு முகாமில், ஒரே நாளில் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.முதல்வர் பசவராஜ் பொம்மை, மத்திய அரசு, அமைச்சர்களுடன் நடத்திய ஆலோசனைக்கு பின், ஆகஸ்டில், மத்திய அரசு, 1.10 கோடி தடுப்பூசி டோஸ்களை வழங்கியுள்ளது.

டிசம்பருக்குள் பெங்களூரில் தகுதி வாய்ந்தவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திய, நாட்டின் முதல் மெட்ரோ நகரமாக திகழும்.பெங்களூரு மாநகராட்சியில் ஒரு கோடி தடுப்பூசி உட்பட மாநிலம் முழுவதும் நான்கு கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது.பீதர், யாத்கிர், ராய்ச்சூர், கலபுரகியில் தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். குடிசைப்பகுதிகளில் வசிப்போருக்கு தினமும் சென்று தடுப்பூசி செலுத்த ஊழியர்கள் நியமிக்கப்படுவர்.கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள அனைத்து விதமான நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது.

ஆனாலும் பொது மக்கள் எச்சரிக்கையாக இருந்து, அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.வெளிநாடுகளிலிருந்து வருவோர், விமான நிலையத்தில் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X