இந்தியா

தீர்மானம்: மேகதாது அணை குறித்து சட்டசபையில் ...ஆணைய கூட்டத்தில் விவாதிக்க எதிர்ப்பு

Added : ஆக 31, 2021
Share
Advertisement
புதுச்சேரி,-'டில்லியில் இன்று கூடும் காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், மேகதாது அணை கட்டுமானம் குறித்த விவாதத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது' என, புதுச்சேரி சட்டசபையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் நேற்று, கர்நாடக அரசு, காவிரி ஆற்றில் மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட முயல்வதை மத்திய அரசு தடுத்து நிறுத்த

புதுச்சேரி,-'டில்லியில் இன்று கூடும் காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், மேகதாது அணை கட்டுமானம் குறித்த விவாதத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது' என, புதுச்சேரி சட்டசபையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் நேற்று, கர்நாடக அரசு, காவிரி ஆற்றில் மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட முயல்வதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டி, சிறப்பு தீர்மானத்தை முதல்வர் ரங்கசாமி கொண்டு வந்தார்.அந்த தீர்மானத்தில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிதாக அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த அணை கட்டினால் காவிரியின் கடைமடை பகுதியான புதுச்சேரி மாநிலம், காரைக்காலுக்கு வழங்க வேண்டிய 7 டி.எம்.சி., காவிரி நீர் முழுமையாக கிடைக்கப் பெறாமல் போகும் அபாயம் உள்ளது.மேகதாது அணை கட்டப்பட்டால், 67 டி.எம்.சி., தண்ணீரை தடுத்து சேமிக்க முடியும்.

இதனால், கீழ் பாசன பகுதிகளான தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வர வேண்டிய நீரில் பற்றாக்குறை ஏற்பட்டு, காரைக்காலில் விவசாயம் பாதிக்கும். புதுச்சேரி மாநிலத்தின் நெல் உற்பத்தி, பொருளாதாரம் முற்றிலும் பாதிக்கும் என்ற கருத்து உள்ளது.மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்துமாறு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. 3.12.2018 அன்று நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் இரண்டாவது கூட்டத்தில், புதுச்சேரி அரசு தனது எதிர்ப்பை தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக 14.7.2021ல் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டி, அன்றே பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், நீர்வள ஆதார துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.தமிழக அரசு மூலம் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு, நிலுவையில் உள்ள போது, அது நீதிமன்ற வரம்பிற்கு உட்பட்டதாகும்.எனவே, 31.8.2.21ல் (இன்று) நடைபெறவுள்ள 13வது காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்ட நிகழ்ச்சி நிரல் வரிசை எண் 13.9ல் குறிப்பிட்டுள்ள மேகதாது அணை கட்டுமான விவாதத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது என சட்டசபையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.அப்போது குறுக்கிட்ட நாஜிம் (தி.மு.க.,), 'தமிழக அரசு தொடர்ந்துள்ள இந்த வழக்கில்,

புதுச்சேரி அரசு தன்னை ஒரு வாதியாக இணைத்துக் கொள்ள வேண்டும்' என்றார்.அசோக்பாபு, (பா.ஜ.,): தமிழகத்துடன் இணையாமல், புதுச்சேரி அரசு தனியாக வழக்கு தொடர வேண்டும் என்றார்.அமைச்சர் நமச்சிவாயம்: அசோக்பாபுவின் கருத்து ஏற்படையது என்பதால், அதுகுறித்து பரிசீலிக்க வேண்டும் என்றார்.

இதற்கு பதில் அளித்த சட்டத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், காவிரி நதி நீர் பிரச்னையில் யார் வழக்கு தொடர்ந்தாலும், புதுச்சேரி உள்ளிட்ட நான்கு மாநிலங்கள் மற்றும் மத்திய அரசிடமும் விளக்கம் கேட்கும் என்றார்.நீண்ட விவாதத்திற்கு பின், முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.எதிர்ப்பை தெரிவிப்போம்பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் நேற்று அளித்த பேட்டி:காரைக்கால் பகுதி விவசாயிகளுக்கு பாதிப்பாக இருக்கக் கூடிய மேகதாது அணை பிரச்னை குறித்து, காரைக்கால் எம்.எல்.ஏ.,க்களை அழைத்து முதல்வர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், டில்லியில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் இன்று கூடுகிறது. இதில் உறுப்பினராக உள்ள புதுச்சேரி பொதுப்பணித் துறையின் செயலர் விக்ராந்த்ராஜா பங்கேற்க உள்ளார்.இக்கூட்டத்தில் மேகதாது அணை பிரச்னை குறித்து விவாதிக்க கூடாது என்ற புதுச்சேரி அரசின் நிலைப்பாட்டை தெரிவித்து, கடுமையான எதிர்ப்பை தெரிவிப்பார்.மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என ஏற்கனவே புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசிற்கு அனுப்பியுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார் .

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X