இந்தியா

மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம்.. சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

Updated : ஆக 31, 2021 | Added : ஆக 31, 2021
Share
Advertisement
புதுச்சேரி-''மழையால் சேதமடைந்த நெல் உள்ளிட்ட அனைத்து பயிர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.சட்டசபையில் நேற்று நடந்து விவாதம்:எதிர்க்கட்சி தலைவர் சிவா: புதுச்சேரியில், கடந்த சில தினங்களாக சூறைக்காற்றுடன் பெய்த மழை காரணமாக நஞ்சை, புஞ்சை என அனைத்து பயிர்களும் சேதமடைந்துள்ளன. விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க
மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம்..  சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி-''மழையால் சேதமடைந்த நெல் உள்ளிட்ட அனைத்து பயிர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.

சட்டசபையில் நேற்று நடந்து விவாதம்:எதிர்க்கட்சி தலைவர் சிவா: புதுச்சேரியில், கடந்த சில தினங்களாக சூறைக்காற்றுடன் பெய்த மழை காரணமாக நஞ்சை, புஞ்சை என அனைத்து பயிர்களும் சேதமடைந்துள்ளன. விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.பயிர் காப்பீடுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 31ம் தேதி கடைசி நாள் என கூறப்பட்டுள்ளது.

பயிர் காப்பீடு திட்டத்தில் விண்ணப்பித்த விவசாயிகளில் 100 பேர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதாக தெரி கிறது. அனைத்து விவசாயிகளையும் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.செந்தில்குமார் (தி.மு.க.): பயிர் காப்பீட்டு திட்டத்தில் இதுவரை 100 பேரின், 170 ஏக்கர் நிலம் மட்டுமே காப்பீடு செய்துள்ளதாக வேளாண் துறை இணையதளத்தில் உள்ளது. விவசாயிகள் பிரச்னையில் பிரதமர் தனி கவனம் செலுத்துகிறார். ஆனால், நமது அதிகாரிகள் கவனம் செலுத்துவதில்லை.

அமைச்சர் தேனீ ஜெயக்குமார்: இதுகுறித்து துறை இயக்குநரிடம் விபரம் கேட்டுள்ளேன். அந்த விபரம் விரைவில் சபையில் தாக்கல் செய்யப்படும்.பி.ஆர்.சிவா (சுயே.,): காரைக்காலில் கடந்த காலங்களில் 15 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்டது. தற்போது, 5,000 ஏக்கராக சுருங்கி விட்டது.கடந்த ஆட்சியில் எந்த பயனும் இல்லாமல் இருந்தது. இனியாவது விவசாயிகள் மீது அரசு கவனம் செலுத்த வேண்டும். பயிர் காப்பீடு காலக் கெடுவை நீட்டிக்க வேண்டும்.துணை சபாநாயகர் ராஜவேலு: ஆட்சி மட்டுமே மாறியுள்ளது. வேளாண் துறையும், அதிகாரிகளும் மாறவில்லை. இனியாவது வேளாண் அதிகாரிகள் விவசாயிகள் மீது கவனம் செலுத்த வேண்டும்

.முதல்வர் ரங்கசாமி: மழை யால் பாதித்த பயிர்களை கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.நாஜிம் (தி.மு.க.,): விவசாயிகள் மீது அரசு அக்கறை கொண்டு செயல்படுவதாக கூறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. காரைக்காலில் குறுவை சாகுபடி நடைபெற உள்ளது. கொள்முதல் நிலையம் இல்லாததால், குறைந்த விலைக்கு விளை பொருட்களை விற்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். அதனால், ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் கொள்முதல் மையம் திறக்க வேண்டும்.

தியாகராஜன் (தி.மு.க.,): கடந்த காலத்தில் வேளாண் இடுபொருட்கள் மானியத்தில் வழங்கப்பட்டது. ஆனால், தற்போது இடுபொருட்கள் வழங்குவதில்லை. மானியத்துடன் இடுபொருட்கள் வழங்க வேண்டும்.செந்தில்குமார் (தி.மு.க.,): மத்திய அரசு, நெல் குவிண் டால் ரூ.1,940 ஆதார விலை யாக அறிவித்துள்ளது. ஆனால் நானே மூட்டை ரூ.840க்கு விற்றேன். விவசாயிகள் நஷ்ட மடைவதை தவிர்க்க, நெல்லை அரசு கொள்முதல் செய்ய வேண்டும். இல்லையெனில், தமிழக அரசு கொள்முதல் நிலையங்கள் மூலமாகவோ அல்லது இந்திய உணவு கழகம் மூலமாகவோ கொள்முதல் செய்ய வேண்டும்.

அமைச்சர் தேனீ ஜெயக்குமார்: விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தேவையெனில், தமிழக அரசின் கொள்முதல் நிலையங்களை புதுச்சேரியில் திறக்கவும், இந்திய உணவுக் கழகம் மூலம் கொள்முதல் செய்திடவும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X