பொது செய்தி

இந்தியா

பொருளாதார வளர்ச்சிக்கான பட்ஜெட்: ஆறுமுகம் பாராட்டு

Added : ஆக 31, 2021
Share
Advertisement
புதுச்சேரி-சட்டசபையில் நேற்று பட்ஜெட் உரையின் மீதான விவாதத்தில், ஆறுமுகம் எம்.எல்.ஏ., பேசியதாவது;முதல்வர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட், அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் உள்ளது.புதிதாக 10 ஆயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்குவது வரவேற்கத்தக்கது. விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்வது

புதுச்சேரி-சட்டசபையில் நேற்று பட்ஜெட் உரையின் மீதான விவாதத்தில், ஆறுமுகம் எம்.எல்.ஏ., பேசியதாவது;முதல்வர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட், அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் உள்ளது.புதிதாக 10 ஆயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்குவது வரவேற்கத்தக்கது. விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்வது சிறப்பானது.விவசாயிகளுக்கு உற்பத்தி மானியமாக ஏக்கருக்கு ரூ.5000, விவசாயத்தில் ஈடுபடும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 50 சதவீதம் மானியம், காரைக்கால் பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த தடுப்பணை கட்டுதல் போன்ற திட்டங்கள் வரவேற்புக்குரியது. இலவச அரிசி வழங்க ரூ.197.5 கோடி, கல்வித் துறைக்கு ரூ.742 கோடி, திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலை சுற்றி வீதிகளை செப்பனிட ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்த பட்ஜெட் பொருளாதார வளர்ச்சிக்கானது என்பதில் ஐயமில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X