பொது செய்தி

இந்தியா

துாண்டில்முள் வளைவு: கல்யாணசுந்தரம் கோரிக்கை

Added : ஆக 31, 2021
Share
Advertisement
புதுச்சேரி,-''மத்திய அரசு உதவி யுடன், காலாப்பட்டு கடலோர கிராமங்களில் துாண்டில்முள் வளைவு முறையில் கருங்கற்கள் கொட்டி, கடல் அரிப்பினை தடுக்க வேண்டும்'' என பா.ஜ., எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம் பேசினார்.சட்டசபையில் பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் அவர் பேசியதாவது:கடல் அரிப்பினை தடுக்க எனது தொகுதியை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளில் 20 கோடி ரூபாய் செலவில் துாண்டில் முள் வளைவு

புதுச்சேரி,-''மத்திய அரசு உதவி யுடன், காலாப்பட்டு கடலோர கிராமங்களில் துாண்டில்முள் வளைவு முறையில் கருங்கற்கள் கொட்டி, கடல் அரிப்பினை தடுக்க வேண்டும்'' என பா.ஜ., எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம் பேசினார்.சட்டசபையில் பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் அவர் பேசியதாவது:கடல் அரிப்பினை தடுக்க எனது தொகுதியை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளில் 20 கோடி ரூபாய் செலவில் துாண்டில் முள் வளைவு முறையில் கருங்கற்கள் கொட்டி, தடுப்பு ஏற்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதனால் எனது காலாப்பட்டு தொகுதியில் பிள்ளைச்சாவடி, சின்ன காலாப் பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வீடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வைத்திக்குப்பம் பகுதியில் துாண்டில் முள் வளைவு முறையில் கருங்கற்கள் கொட்டும் திட்டம் துவக்கப்படுகிறது.காலாப்பட்டு கடலோர கிராமங்களில் கடல் அரிப்பினை தடுக்க துாண்டில்முள் வளைவு முறையில் கருங்கற்கள் திட்டம் துவக்கப்படுமா என்பதை அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.அமைச்சர் லட்சுமி நாராயணன்: பட்ஜெட்டில் நிதி நிலையை பொறுத்து மற்ற கடலோர கிராமங்களில் கருங்கல் கொட்டி தடுப்பு ஏற்படுத்தப்படும்.கல்யாணசுந்தரம்: கடல் அரிப்பினை தடுக்க மத்திய அரசு நிதியுதவி அளிக்கிறது. பிற மாநிலங்களை பொறுத்தவரை 60 சதவீதம் மத்திய அரசும், 40 சதவீதம் மாநில அரசும் பங்கிட்டுக் கொள்கின்றன.யூனியன் பிரதேசங்களை பொறுத்தவரை, 100 சதவீதம் இத்திட்டத்திற்கு மத்திய அரசே நிதி வழங்குகிறது.எனவே காலாப்பட்டு தொகுதி மட்டுமின்றி அனைத்து கடலோர கிராமங்களிலும் துாண்டில்முள் வளைவு முறையில் கருங்கற்கள் கொட்டி, கடல் அரிப்பினை தடுக்க நடவடிக்கை எடுக்கலாம்.அமைச்சர் லட்சுமிநாராயணன்: மத்திய அரசு உதவியுடன் நடப்பாண்டிலேயே இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X