பொது செய்தி

இந்தியா

குழந்தைகளுக்கு நிவாரணம் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
புதுச்சேரி-சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் அவர் பேசியதாவது:பட்ஜெட்டில் கடந்த ஆண்டைவிட வெறும் 1.58 சதவீதம் தான் கூடுதலாக இந்த அரசு நிதி பெற்றுள்ளது. அரசுக்கு எப்படி வருமானம் வரும்? புதிய வரி விதிக்க உள்ளீர்களா? குப்பை வரியை ரத்து செய்வோம், மின் கட்டணத்தை குறைப்போம் என்றீர்களே, செய்வீர்களா? அதற்கான அறிவிப்பு எதுவும் இல்லை.புதிய சட்டசபை கட்டுவது தொடர்பாக அனைத்து

புதுச்சேரி-சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் அவர் பேசியதாவது:பட்ஜெட்டில் கடந்த ஆண்டைவிட வெறும் 1.58 சதவீதம் தான் கூடுதலாக இந்த அரசு நிதி பெற்றுள்ளது.

அரசுக்கு எப்படி வருமானம் வரும்? புதிய வரி விதிக்க உள்ளீர்களா? குப்பை வரியை ரத்து செய்வோம், மின் கட்டணத்தை குறைப்போம் என்றீர்களே, செய்வீர்களா? அதற்கான அறிவிப்பு எதுவும் இல்லை.புதிய சட்டசபை கட்டுவது தொடர்பாக அனைத்து எம்.எல்.ஏ.,க்களையும் அழைத்து கருத்து கேட்டிருக்கலாம். 1996ல் இருந்து இதுவரை மூன்று முறை புதிய சட்டசபை கட்ட பூமி பூஜை போடப்பட்டு விட்டது. தற்போது தேர்வு செய்துள்ள இடத்தை முழுமையாக ஆர்ஜிதம் செய்துவிட்டீர்களா.கடந்த ஆட்சியில் சட்டசபை கட்ட தேர்வு செய்த இடத்தை, தெரியாமல் அந்த இடத்தை தேர்வு செய்து விட்டோம், எங்களிடம் பணமில்லை என்று கூறி திருப்பி ஒப்படைத்து விட்டனர். அனைத்து எம்.எல்.ஏ.,க் களையும் அழைத்து ஆலோசனை நடத்தினால் மகிழ்ச்சி. பள்ளி திறப்பு விவகாரத்தில், தமிழக அரசின் முடிவை அரசு பின் பற்ற வேண்டும்.இதுவரை பட்ஜெட்டில் 20 சதவீதம் ஏனாம் பிராந்தியத்திற்கே ஒதுக்கப்பட்டு வந்தது. இந்த பட்ஜெட்டில் அதுபோல் இல்லை. அந்த பணத்தை பின்தங்கிய உப்பளம் தொகுதி, மிகப்பெரிய தொகுதியான வில்லியனுார் உள்ளிட்ட தொகுதிகளுக்கு செலவிட வேண்டும்.கொரோனாவில் தாய், தந்தையை இழந்த குழந்தைகளுக்கு தமிழகத்தில் நிவாரணம் வழங்கப் படுகிறது. நம்மிடம், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கைக்கூட இல்லை என்றார்.குறுக்கிட்ட முதல்வர் ரங்கசாமி, 'கணக்குகள் நம்மிடம் உள்ளது. புதுச்சேரியில் ஏற்கனவே உயர்கல்வி இலவசமாக வழங்கப்படுகிறது. கொரோனாவில் இறந்தவர்களின் குடும்பத் திற்கு நிவாரணம் அறிவிக்க முடியாத சூழல் உள்ளது. இவ்வழக்கின் தீர்ப்பிற்கு பிறகு கொரோனாவில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X