பொது செய்தி

இந்தியா

சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க அரசு செயலர்களுக்கு உத்தரவு

Added : ஆக 31, 2021
Share
Advertisement
புதுச்சேரி-சட்டபை பட்ஜெட் கூட்டத்தொடரில் அனைத்து துறை அரசு செயலர்கள், இயக்குநர்கள் பங்கேற்க சபாநாயகர் அதிரடியாக உத்தரவிட்டார்.புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரின் மூன்றாம் நாள் கூட்டம் நேற்று நடந்தது.அப்போது, சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் நேரு, பி.ஆர்.சிவா ஆகியோர், 'மக்கள் பிரச்னைகள் குறித்தே இங்கு விவாதிக்கப்படுகிறது. பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டியவர்கள்

புதுச்சேரி-சட்டபை பட்ஜெட் கூட்டத்தொடரில் அனைத்து துறை அரசு செயலர்கள், இயக்குநர்கள் பங்கேற்க சபாநாயகர் அதிரடியாக உத்தரவிட்டார்.புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரின் மூன்றாம் நாள் கூட்டம் நேற்று நடந்தது.அப்போது, சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் நேரு, பி.ஆர்.சிவா ஆகியோர், 'மக்கள் பிரச்னைகள் குறித்தே இங்கு விவாதிக்கப்படுகிறது. பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டியவர்கள் அதிகாரிகள். ஆனால், அவர்கள் யாரும் சட்டசபைக்கு வருவதில்லை. நாம் தான் அதிகாரிகளை தேடிச் செல்ல வேண்டி உள்ளது. அதனால், சட்டசபை நடக்கும் போது, துறை செயலர்கள், இயக்குநர்கள் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தினர்.அதனை ஏற்ற சபாநாயகர், அரசின் அனைத்து துறை செயலர்கள் மற்றும் இயக்குநர்கள் சபை நடவடிக்கையில் உடனடியாக பங்கேற்க உத்தரவிட்டார்.அதை தொடர்ந்து, உடனடியாக தலைமைச்செயலர் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் இயக்குநர்கள் அவசர அவசரமாக சட்டபைக்கு வந்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் இருந்து சபை நடவடிக்கைகளை கண்காணித்தனர்.சபாநாயகர் செல்வம் கூறுகையில், 'எம்.எல். ஏ.,க்களின் கோரிக்கையை ஏற்று, அனைத்து துறை அரசு செயலர்கள், இயக்குநர்கள் பங்கேற்க உத்தர விட்டுள்ளேன். இதுதொடர்பாக தலைமை செயலரை அழைத்து அறிவுறுத்தி உள்ளேன்.சபை நடவடிக்கையில் பங்கேற்காத அதிகாரிகள் மீது, அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தை கூட்டி கடும் நடவடிக்கை எடுப்பேன்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X