பொது செய்தி

இந்தியா

இலவச மருத்துவ காப்பீடு பிரகாஷ்குமார் கோரிக்கை

Added : ஆக 31, 2021
Share
Advertisement
புதுச்சேரி,-பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் அவர் பேசியதாவது:முத்தியால்பேட்டை தொகுதியில் வடிகால் வாய்க்கால்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன கழிவு நீர் சாலையில் பரவி பொதுமக்களுக்கு மிகுந்த துன்பத்தை ஏற்படுத்துகிறது. இதை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும்.ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சிவப்பு ரேஷன்கார்டு தாரர்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு திட்டம்

புதுச்சேரி,-பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் அவர் பேசியதாவது:முத்தியால்பேட்டை தொகுதியில் வடிகால் வாய்க்கால்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன கழிவு நீர் சாலையில் பரவி பொதுமக்களுக்கு மிகுந்த துன்பத்தை ஏற்படுத்துகிறது. இதை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும்.ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சிவப்பு ரேஷன்கார்டு தாரர்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அத்திட்டத்தை மஞ்சள் அட்டைதாரர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.மஞ்சள் அட்டைதாரர்களிலும் ஏழ்மையானவர்கள் உள்ளனர். முத்தியால்பேட்டை தொகுதிக்கு தனியே அலுவலக கட்டடம் இல்லை. மக்களை நேரில் சந்திக்க, எம்.எல்.ஏ., அலுவலகம் கட்டித் தர வேண்டும். முத்தியால்பேட்டை தொகுதிக்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் விரைந்து அமைத்து தர வேண்டும்.வைத்திக்குப்பம் பகுதியில் கடல் அரிப்பு தடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் அதிகம் வாழும் முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட சேலை நகர் பகுதியிலும் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.இத்திட்டத்தில் முத்தியால்பேட்டை கடலோர கிராமங்களை சேர்க்க வேண்டும். சட்டசபையில் உள்ள 58 தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X