பொது செய்தி

இந்தியா

கல்விக்கடன் தள்ளுபடி செந்தில்குமார் கோரிக்கை

Added : ஆக 31, 2021
Share
Advertisement
புதுச்சேரி-பட்ஜெட் மீதான பொது விவாதத்தில், தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில்குமார் பேசியதாவது:நீண்ட காலமாக செயல் படாமல் உள்ள பாகூர் கூட் டுறவு விவசாயக் கடன் சங்கத்தை செயல்படுத்தநடவடிக்கை எடுக்க வேண்டும்.நுாறு நாள் வேலை வாய்ப்பு திட்டம் கடந்த காலங்களில் வெறும் 20 நாட்கள் மட்டுமே செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் வேலை செய்யும் நாட்களை உயர்த்த வேண்டும். இத்திட்டத்தில்

புதுச்சேரி-பட்ஜெட் மீதான பொது விவாதத்தில், தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில்குமார் பேசியதாவது:நீண்ட காலமாக செயல் படாமல் உள்ள பாகூர் கூட் டுறவு விவசாயக் கடன் சங்கத்தை செயல்படுத்தநடவடிக்கை எடுக்க வேண்டும்.நுாறு நாள் வேலை வாய்ப்பு திட்டம் கடந்த காலங்களில் வெறும் 20 நாட்கள் மட்டுமே செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் வேலை செய்யும் நாட்களை உயர்த்த வேண்டும். இத்திட்டத்தில் வேலை செய்வோருக்கு கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்.அட்டவனை இன பெண்களுக்கான உதவித் தொகையை ரூ.75,000 இருந்து ஒரு லட்சமாக உயர்த்தியதற்கும், பாட்கோவில் மாணவர்கள் பெற்ற கல்விக் கடனை தள்ளுபடி செய்ததற்கும் முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இதேபோல் பொருளாதாரத்தில் பின் தங்கிய பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் வாரியம் மூலம் கல்விக்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.புதுச்சேரி குடிசை மாற்று வாரியம் மூலம் ஏற்கனவே மானிய உதவி பெற்று வீடு கட்டாதவர்களுக்கு அபராதமாக வசூலிக்கப்படும் வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும்.இவர்களை புதிய திட்டத்தில் பயனாளிகளாக சேர்க்க வேண்டும். ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் தத்தளிக்கும் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகங்களுக்கு கொடை நிதிவழங்க வேண்டும்.மத்திய அரசின் கொடை நடப்பாண்டில் ரூ. 27 கோடி மட்டுமே கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. நடப்பு துணை மானிய கோரிக்கையிலேயே கூடுதல் மானியம், கொடை பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X