பொது செய்தி

இந்தியா

வவுச்சர் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: முதல்வர் அறிவிப்பு

Added : ஆக 31, 2021
Share
Advertisement
புதுச்சேரி-''பொதுப்பணித் துறையில் பணியாற்றும் வவுச்சர் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்கப்படும்'' என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.இதுகுறித்து சட்டசபை யில் நேற்று நடந்த விவாதம்:எதிர்க்கட்சித் தலைவர் சிவா: பொதுப்பணித்துறையில் கடந்த 15 ஆண்டுகளாக மாதம் ரூ.3,200 சம்பளத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், கடந்த என்.ஆர்.காங்., அரசில் நியமிக்கப்பட்டவர்கள்.

புதுச்சேரி-''பொதுப்பணித் துறையில் பணியாற்றும் வவுச்சர் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்கப்படும்'' என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.இதுகுறித்து சட்டசபை யில் நேற்று நடந்த விவாதம்:எதிர்க்கட்சித் தலைவர் சிவா: பொதுப்பணித்துறையில் கடந்த 15 ஆண்டுகளாக மாதம் ரூ.3,200 சம்பளத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், கடந்த என்.ஆர்.காங்., அரசில் நியமிக்கப்பட்டவர்கள். நிரந்தர ஊழியர்களுக்கு இணையாக வேலை செய்கின்றனர்.அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் மக்களுக்கு குடிநீர் கிடைக்காது, கழிவுநீர் அடைப்புகள் அகற்றப்படாது. அவர்களது போராட்டத்தில் நாங்களும் இணைந்து போராட வேண்டுமா. அவர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்குவதுடன், பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.கல்யாணசுந்தரம், (பா.ஜ.,): வவுச்சர் ஊழியர்கள் அனைத்து தொகுதியிலும் உள்ளனர். இவர்களின் பணி மிக முக்கியமானது என்பதால், அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.நாஜிம் (தி.மு.க.,): வவுச்சர் ஊழியர்களுக்கு குறைந்த ஊதியத்தையும் 6 மாதத்திற்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. தினக்கூலி ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக ரூ.280 என அரசாணை உள்ளது. அரசு உத்தரவை அரசே மதிக்கவில்லை என்றால் எப்படி. அவர்கள் ஒருநாள் வேலை நிறுத்தம் செய்தால் குடிக்கக்கூட தண்ணீர் கிடைக்காது.முதல்வர், ரங்கசாமி: வவுச்சர் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான சாத்தியகூறுகள் இல்லை. ஆனால், அவர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்கலாம். அது எவ்வளவு என்பதை பிறகு கூறுகிறேன்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X