பொது செய்தி

இந்தியா

தனி கல்வி வாரியம் கேட்கிறார் ரமேஷ்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
புதுச்சேரி-சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ., ரமேஷ் பேசியதாவது:அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் முதல் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். புதுச்சேரிக்கு என தனி பல்கலைக் கழகம், தொழில் நுட்ப பல்கலைக் கழகம் உள்ளன. மருத்துவ பல்கலைக் கழகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன் சட்டக் கல்லுாரி விழாவில் பங்கேற்ற

புதுச்சேரி-சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ., ரமேஷ் பேசியதாவது:அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் முதல் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். புதுச்சேரிக்கு என தனி பல்கலைக் கழகம், தொழில் நுட்ப பல்கலைக் கழகம் உள்ளன. மருத்துவ பல்கலைக் கழகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன் சட்டக் கல்லுாரி விழாவில் பங்கேற்ற முதல்வர், சட்டப் பல்கலைக் கழகம் துவங்குவது குறித்து பேசியுள்ளார்.இவ்வளவு பல்கலைக்கழகங்கள் இருக்கும் புதுச்சேரியில், தனி கல்வி வாரியம் இல்லாதது வேதனையாக உள்ளது. கல்வி வாரியம் அமைப்பது தொடர்பாக கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், அதன் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உடனடியாக கல்வி வாரியம் அமைக்க வேண்டும் .அமைச்சர் நமச்சிவாயம்: நிதி ஆதாரம் இல்லாததால் கல்வி வாரியத்தை செயல்படுத்த முடியவில்லை. வாரியம் அமைத்தால் தனியார் பள்ளிகள் சி.பி. எஸ்.இ., பாடத் திட்டத்திற்கு மாறும் நிலை இருந்ததால், மாநில பாடத்திட்டத்திற்கு என கல்வி வாரியம் வேண்டுமா என கேள்வி எழுந்தது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X