பொது செய்தி

இந்தியா

நிர்வாகிகள் சரமாரி கேள்வி

Added : ஆக 31, 2021
Share
Advertisement
புதுச்சேரி-காங்., அலுவலகத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான கூட்டத்தில், கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால், கூட்டம் பாதியில் முடிக்கப்பட்டது. புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக காங்., ஆலோசனை கூட்டம், கட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. மாநில காங்., தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., உள்ளிட்டோர்

புதுச்சேரி-காங்., அலுவலகத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான கூட்டத்தில், கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால், கூட்டம் பாதியில் முடிக்கப்பட்டது. புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக காங்., ஆலோசனை கூட்டம், கட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. மாநில காங்., தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கட்சி நிர்வாகிகள், 'புதுச்சேரி வரலாற்றில் காங்., கட்சி தேர்தலில் இதுபோன்ற தோல்வியை சந்தித்ததில்லை. தேர்தல் முடிந்த 3 மாதங்கள் கடந்தும், தோல்விக்கான காரணம் ஆராய எந்த கூட்டத்தையும் கூட்டவில்லை. காங்., எம்.எல்.ஏ.,க்களின் தொகுதிகளை ஏன் தி.மு.க.,விற்கு ஒதுக்கினீர்கள், நாராயணசாமி தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியது ஏன் என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.கட்சியில் இருந்து வெளியேறியவர்களை தடுக்காததும் தோல்விக்கு காரணம் என குற்றம்சாட்டினர். இதற்கு பதில் அளிக்க முடியாமல், தலைவர்கள் திணறினர். ஒரு தரப்பினர் கட்சித் தலைமைக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். இதனால், கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.கட்சி தலைமையின் உத்தரவை பின்பற்றியே செயல்பட முடியும் என கூறி, கூட்டத்தை பாதியிலே முடித்துக் கொண்டு நிர்வாகிகள் புறப்பட்டு சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X