பொது செய்தி

தமிழ்நாடு

நடப்பாண்டு கொள்முதலானது 1.52 லட்சம் டன் நெல் ; விலை உயர்வால் விவசாயிகள் ஆர்வம்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2020 - 21ம் ஆண்டு, அரசின் முயற்சியால் அரசு கொள்முதல் நிலையங்களில், 1.52 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. கொள்முதலுக்கான விலை உயர்வு காரணமாக, நெல் விற்க விவசாயிகள் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர்.காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில், பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. மாவட்டம் முழுதும் 6.5 லட்சம்
நடப்பாண்டு கொள்முதலானது 1.52 லட்சம் டன் நெல் ; விலை உயர்வால் விவசாயிகள் ஆர்வம்

காஞ்சிபுரம் : ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2020 - 21ம் ஆண்டு, அரசின் முயற்சியால் அரசு கொள்முதல் நிலையங்களில், 1.52 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.

கொள்முதலுக்கான விலை உயர்வு காரணமாக, நெல் விற்க விவசாயிகள் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர்.காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில், பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. மாவட்டம் முழுதும் 6.5 லட்சம் ஏக்கர் விவசாய பரப்பு நிலங்கள் உள்ளன.இதில் சொர்ணவாரி பருவத்திற்கு 61 ஆயிரம் ஏக்கர், சம்பா, நவரை பருவத்தில் தலா 1.50 லட்சம் ஏக்கர் பரப்பில் விவசாயிகள் நெல் பயிரிடுகின்றனர்.

இவர்கள் பயிரிடும் நெல் நன்கு வளர்ந்ததும் அறுவடை செய்து, அரசு நெல் கொள்முதல் நிலையம் மற்றும் தனியார் வியாபாரிகளிடம் விவசாயிகள் விற்பனை செய்வர்.தனியார் அரிசி ஆலைசில ஆண்டுகளுக்கு முன், நுகர் பொருள் வாணிபக் கழக கொள்முதல் நிலையத்திடம் நெல் விற்க, விவசாயிகள் தயங்கினர். அதற்கு காரணமாக, 'அரசிடம் நெல் கொடுக்க, பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால் தனியார், கொள்முதலுக்கான பணத்தை உடனுக்குடன் கொடுத்தனர்' என, விவசாயிகள் தெரிவித்தனர்.இரு ஆண்டுகளாக, கொரோனா தொற்று காரணமாக, தனியார் அரிசி ஆலை பெரிதளவில் செயல்படவில்லை.இதனால் தனியார் வியாபாரிகள்,

அதிக விலை கொடுத்து நெல் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது.இதை பயன்படுத்தி கொண்ட அரசு, நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்டந்தோறும் அதிகப்படுத்தின. விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட நெல்லுக்கான தொகையை, அவர்களின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் செலுத்தப்பட்டது.இதனால் விவசாயிகள், தனியாரை கைவிட்டு அரசு கொள்முதல் நிலையங்களில் நெல் விற்க ஆர்வம் காட்டுகின்றனர்.அரசு கொள்முதல் நிலையத்தில், நடப்பு ஆண்டு சன்ன ரகம் நெல், 100 கிலோவுக்கு போனஸ் 70 ரூபாயுடன் சேர்த்து 1,958 ரூபாயும், பொது ரகத்திற்கு போனஸ் 50 ரூபாய் சேர்த்து 1,918 ரூபாயும் அரசு சார்பில் வழங்கப்படுகிறது. மகிழ்ச்சிஆனால் தனியார் வியாபாரிகள் 82 கிலோ மூட்டைக்கு அதிகபட்சமாக 900 ரூபாய்க்கே நெல் மூட்டைகளை விலைக்கு வாங்கினர்.கடந்த 2019 - 20ல் 99 ஆயிரம் டன் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், நடப்பாண்டு, 1.52 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதால், விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.மஞ்சம்பேடு பகுதியில் மூன்று ஏக்கரும், முத்துவேடு பகுதியில் ஐந்து ஏக்கரும் நிலம் உள்ளது.

நடப்பாண்டு நவரை பட்டத்தில் என் நிலங்களில், 320 மூட்டைகள் நெல் மகசூல் செய்யப்பட்டது. அவற்றை அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் கொடுத்து, பணம் பெற்றேன். தனியார் வியாபாரிடம் அதிகபட்சமாக 82 கிலோ மூட்டைக்கு 900 ரூபாய் வழங்கினர். உடனடியாக அவர்களிடம் இருந்து பணம் வாங்க முடியவில்லை. ஆனால் அரசு, 100 கிலோவுக்கு, 1,958 ரூபாய் வழங்கியது. இந்த தொகை, விவசாயிகளுக்கு லாபமாக இருந்தது. கொள்முதல் நிலையத்தில் நீண்ட நாள் காத்திருந்ததை தவிர்த்து, பெரிய பிரச்னை எதுவும் இல்லை. அரசு நெல்லுக்கான விலையை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும் என நம்பிக்கையில் இருக்கிறோம்.ஆர்.சார்லஸ், 55, விவசாயி, மஞ்சமேடுநடப்பாண்டு அதிகளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டதற்கு பல காரணங்கள் உள்ளன. தனியாரைவிட கூடுதல் விலை, ஒருங்கிணைந்த மாவட்டத்தில், 100 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் துவங்கப்பட்டன.

இதனால், 1.52 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டன. நெல் அதிகம் விவசாயம் செய்யப்படும் இடங்களில், வழக்கம் போல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும். தவிர புதிதாக மருதம், மேனலுார், அத்தியூர்மேல்துளி, கூரம், விஷார் உட்பட, முதற்கட்டமாக, 30 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் துவங்கப்படுகின்றன. அரசு நிலங்களில் மட்டும், நெல் கொள்முதல் நிலையங்கள் நடப்பாண்டு செயல்படும்.அதிகாரி ஒருவர்நுகர்பொருள் வாணிபக் கழகம், காஞ்சிபுரம்கூடுதல் கொள்முதல் நிச்சயம்காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளால், ஒதுக்கீடு செய்த நெல் கொள்முதல் நிலையங்களில், பொறுப்பாளர்களாக இருக்கும் நபர்கள் பலர், அரசியல் கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தனர்.

அவர்கள், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே, டோக்கன் எண்ணையும் பொருட்படுத்தாமல், ஒரு தலைபட்சமாக நெல் கொள்முதல் செய்தனர். இதனால் விவசாயிகள், தனியாருக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில், நெல் கொள்முதல் நிலைய பொறுப்பாளர்களும், பொறுப்பாக நடந்து கொண்டால், நெல் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்; கூடுதல் நெல் கொள்முதலுக்கு வழிவகுக்கும்.சமூக ஆர்வலர்கள்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X