பொது செய்தி

இந்தியா

புதுச்சேரியில் பள்ளி, கல்லுாரிகள் நாளை திறப்பு

Added : ஆக 31, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரியில், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை, பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளன.புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலை காரணமாக, பள்ளி மற்றும் கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு, ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில், தற்போது கொரோனா தொற்றின் பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. அதனால், நாளை (செப். 1ம் தேதி) முதல், பள்ளி

புதுச்சேரி-புதுச்சேரியில், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை, பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளன.புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலை காரணமாக, பள்ளி மற்றும் கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு, ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில், தற்போது கொரோனா தொற்றின் பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. அதனால், நாளை (செப். 1ம் தேதி) முதல், பள்ளி மற்றும் கல்லுாரிகளை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.அதில், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் அரை நாள் மட்டும், சுழற்சி முறையில் இயங்க அனுமதிக்கப் பட்டுள்ளது.அதேபோல கல்லுாரிகளும் சுழற்சி முறையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதையொட்டி, பள்ளிகளில் முன்னேற்பாடு பணிகள் நேற்று துவங்கியது. வகுப்பறைகளை சுத்தப்படுத்துதல், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப் பட்டன.மாணவர்களுக்கு வழங்குவதற்காக இலவச பாடப் புத்தகங்களும் கொள்முதல் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X