பொது செய்தி

தமிழ்நாடு

உத்திரமேரூர் அரசு கலை கல்லூரியில் முதற்கட்ட கலந்தாய்வு

Added : ஆக 31, 2021
Share
Advertisement
உத்திரமேரூர் : உத்திரமேரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் முனைவர் பத்மினி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பு:உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 2021 - 22ம் கல்வியாண்டு இளநிலை படிப்பிற்கான முதற்கட்ட கலந்தாய்வு, கடந்த 25 முதல் 28ம் தேதி வரை நடந்தது.இரண்டாம் கட்ட கலந்தாய்வு நாளை துவங்குகிறது.இதில், பி.எஸ்சி.,

உத்திரமேரூர் : உத்திரமேரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் முனைவர் பத்மினி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பு:உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 2021 - 22ம் கல்வியாண்டு இளநிலை படிப்பிற்கான முதற்கட்ட கலந்தாய்வு, கடந்த 25 முதல் 28ம் தேதி வரை நடந்தது.

இரண்டாம் கட்ட கலந்தாய்வு நாளை துவங்குகிறது.இதில், பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் கணினி அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், செப்., 2ல், பி.காம்., வணிகவியல் மற்றும் பி.ஏ., பொருளியல் பாடப்பிரிவுகளுக்கும், கட் ஆப் மதிப்பெண் 140 முதல் 200 வரை உள்ளவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறுது.செப்., 3ல், பி.ஏ., தமிழ், ஆங்கிலம் பாடப்பிரிவுகளுக்கு, கட் ஆப் மதிப்பெண், 60 கீழ் உள்ளவர்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது.மாணவ - மாணவியர், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 2, ஜாதிச்சான்று, பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவம், 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பிற்கான மதிப்பெண் பட்டியல் மற்றும் மாற்றுச்சான்றிதழின் அசல் மற்றும் இரண்டு நகல் உடன், காலை, 11:00 மணிக்குள் கல்லுாரி வளாகத்திற்கு வரவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X