திறன் மின்மாற்றி பொருத்தும் பணி ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திறன் மின்மாற்றி பொருத்தும் பணி ஆய்வு

Added : ஆக 31, 2021
Share
உளுந்துார்பேட்டை,-உளுந்துார்பேட்டை துணை மின் நிலையத்தில் திறன் மின்மாற்றி பொருத்தும் பணியை எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.உளுந்துார்பேட்டை துணை மின் நிலையத்தில் கடந்த 25ம் தேதி திறன் மின்மாற்றியில் பழுது ஏற்பட்டதால் உளுந்துார்பேட்டை மற்றும் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் துண்டிப்பு ஏற்பட்டது. பின் குறைந்த அழுத்த மின் விநியோகத்தால் பலரும்

உளுந்துார்பேட்டை,-உளுந்துார்பேட்டை துணை மின் நிலையத்தில் திறன் மின்மாற்றி பொருத்தும் பணியை எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.உளுந்துார்பேட்டை துணை மின் நிலையத்தில் கடந்த 25ம் தேதி திறன் மின்மாற்றியில் பழுது ஏற்பட்டதால் உளுந்துார்பேட்டை மற்றும் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் துண்டிப்பு ஏற்பட்டது. பின் குறைந்த அழுத்த மின் விநியோகத்தால் பலரும் பாதிக்கப்பட்டனர்.இதனால் காஞ்சிபுரத்தில் இருந்து 35 டன் திறன் மின்மாற்றி கொண்டு வரப்பட்டு உளுந்துார்பேட்டை துணை மின் நிலையத்தில் பொருத்தும் பணி 2 நாட்களாக நடக்கிறது.இந்த பணியை மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., நேற்று ஆய்வு செய்தார். அப்போது பணிகளை துரிதமாக முடித்து முழுமையான மின்விநியோகம் வழங்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.செயற்பொறியாளர்கள் (பொறுப்பு) ராஜாராமன், சுப்புராஜ், உதவி செயற் பொறியாளர் மோகன், உதவி மின் பொறியாளர் எழிலரசன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X