பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
கண்டமங்கலம் : கண்டமங்கலம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் குறித்த செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் சிறுவந்தாடு பகுதியில் நடந்தது.மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் சண்முகம் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார். தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் ராமதாஸ் தலைமை தாங்கினார். வானுார் தொகுதி எம்.எல்.ஏ.,
 அ.தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்

கண்டமங்கலம் : கண்டமங்கலம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் குறித்த செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் சிறுவந்தாடு பகுதியில் நடந்தது.

மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் சண்முகம் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார். தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் ராமதாஸ் தலைமை தாங்கினார். வானுார் தொகுதி எம்.எல்.ஏ., சக்கரபாணி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பசுபதி, துணைச் செயலாளர் வேலு, எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலாளர் தண்டபாணி, ஒன்றிய அவைத்தலைவர் ஏழுமலை, துணைச் செயலாளர் சீத்தாராமன், காமாட்சி கலியபெருமாள், இணைச் செயலாளர் கவுரிதுரை, பேரவை செயலாளர் முருகன், இளைஞர் அணி செயலாளர் சங்கர், மகளிர் அணி தலைவர் கற்கபம், செயலாளர் கவிதா பாலாஜி ஆகியோர் பேசினர்.

ஒன்றிய எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் பாலகிருஷ்ணன், இணைச் செயலாளர் விஜயகுமார், மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர் அட்சயா முருகன், ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் சுகுமார், மோட்சகுளம் லட்சுமி பட்டு கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன்.முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் தர்மன், குமரேசன், ராமமூர்த்தி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெயராமன், சாந்தி ராமச்சந்திரன், பொன்மலர் ராஜா, முருகன், ராஜாமணி, கல்யாணி, மாவட்ட பிரதிநிதிகள் சேகர், நடராஜன்.ஒன்றிய தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர்கள் அய்யனார், நிர்மலா சுந்தர்ராஜன், கிளைச் செயலாளர் செல்வம், சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர். தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சேதுபதி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X