பொது செய்தி

தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சி தேர்தல்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் கையேடு, நேற்று வெளியிடப்பட்டது.தமிழகத்தில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட ஒன்பது மாவட்டங்களில், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப்பணிகளில், மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக, மறு சீரமைக்கப்பட்ட வார்டு வாரியான

காஞ்சிபுரம் : ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் கையேடு, நேற்று வெளியிடப்பட்டது.தமிழகத்தில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட ஒன்பது மாவட்டங்களில், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப்பணிகளில், மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக, மறு சீரமைக்கப்பட்ட வார்டு வாரியான வாக்காளர் பட்டியல், இன்று வெளியிடப்பட உள்ளது.

இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் கையேடை, மாநில தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டுள்ளது.இதில், தேர்தலில் போட்டியிட போட்டியிட விரும்புவோரின் தகுதிகள், தகுதியின்மைகள், வேட்பு மனு தாக்கல் திரும்ப பெறுதல்.சின்னங்கள் ஒதுக்கிடுதல், தேர்தல் முகவர், வேட்பாளர்கள் தேர்தல் காலத்தில் செய்ய வேண்டியவை, செய்ய வேண்டாதவை, வேட்பாளர் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள், ஓட்டுச்சாவடி முகவரின் கடமைகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார், வாலாஜாபாத், குன்றத்துார் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.இதில், 11 மாவட்ட கவுன்சிலர்கள், 98 ஒன்றிய கவுன்சிலர்கள், 1,938 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 274 ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கான தேர்தல் நடத்தப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X