கிரைம் செய்திகள்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
கஞ்சா விற்றவர் கைது விருத்தாசலம்: விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் தலைமையிலான போலீசார் நேற்று பஸ் நிலைய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கஞ்சா விற்ற தாஷ்கண்ட் நகரைச் சேர்ந்த அண்ணாமலை, 27; என்பவரை கைது செய்து, 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.மகள் மாயம்; தந்தை புகார்விருத்தாசலம்: விருத்தாசலம் ஆலடி சாலையைச் சேர்ந்தவர் முபாரக் ரபிக் மகள் பாத்திமா நபிஷா,

கஞ்சா விற்றவர் கைது

விருத்தாசலம்: விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் தலைமையிலான போலீசார் நேற்று பஸ் நிலைய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கஞ்சா விற்ற தாஷ்கண்ட் நகரைச் சேர்ந்த அண்ணாமலை, 27; என்பவரை கைது செய்து, 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.மகள் மாயம்; தந்தை புகார்

விருத்தாசலம்: விருத்தாசலம் ஆலடி சாலையைச் சேர்ந்தவர் முபாரக் ரபிக் மகள் பாத்திமா நபிஷா, 17; நேற்று முன்தினம் முபாரக் ரபிக் மற்றும் அவரது மனைவி வேலைக்கு சென்றனர். மாலை வீட்டிற்கு வந்த போது பாத்திமா நபிஷாவை காணவில்லை. விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, பாத்திமா நபிஷாவை தேடி வருகின்றனர்.சாராயம் விற்ற முதியவர் கைது

விருத்தாசலம்: விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் ஆதி தலைமையிலான போலீசார் நேற்று பொன்னேரி புறவழிச்சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சாராயம் விற்ற பெரியார் நகரைச் சேர்ந்த உலகநாதன், 60; என்பவரை கைது செய்து 40 குவாட்டர் பாட்டில்கள் மற்றும் 5 லிட்டர் விஷ சாராயத்தை பறிமுதல் செய்தனர்.தந்தை கண்டிப்பு: மகன் தற்கொலை

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த பத்திரக்கோட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் தீனா,22; வெல்டிங் வேலை செய்கிறார். இவர் சில தினங்களாக வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி வந்தார். இதை ரவி கண்டித்தார். ஆத்திரமடைந்த தீனா நேற்று முன்தினம் 29 ம் தேதி மதியம் வீட்டில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்தார். கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.சாலை விபத்து: பெண் பலி

பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திருமாவளவன், 40; விவசாயி. இவர் கடந்த 28 ம்தேதி பைக்கில் தனது மனைவி மாலதி, 32, மகன் ஆதித்யதேவ், 4, ஆகியோருடன் திட்டக்குடியில் இருந்து மருங்கூர் சென்றார். சத்தியவாடி பஸ் நிறுத்தம் வந்தபோது, அவ்வழியே வந்த பைக் மோதியதில், மூவரும் படுகாயமடைந்தனர். அருகிலுள்ளவர்கள் மூவரையும் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாலதி நேற்று இறந்தார். கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.பெண் தற்கொலை

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த கீழ்மாம்பட்டு வடக்கு தெருவை சேர்ந்த ஆறுமுகம் மனைவி ராஜகுமாரி, 55; ஆறுமுகம் இறந்து ஒரு ஆண்டாகிறது. இதனால் மனமுடைந்திருந்த ராஜகுமாரி கடந்த 29ம் தேதி வீட்டில் இருந்த எறும்பு மருந்தை சாப்பிட்டார். கடலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர். பொறியாளர் சாவு

பண்ருட்டி: பண்ருட்டி பொன்னுசாமி தெருவை சேர்ந்த முரளி மகன் போஜராஜன்,28; கட்டட பொறியாளர்; இவர் நேற்று காலை 11:00 மணியளவில் திருவள்ளுவர் நகரில் உள்ள மகிழ்ச்சி என்பவரது வீட்டில் கட்டட பணியை பார்வையிட்டார். அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அவரை துாக்கிச் சென்றனர். பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X