பொது செய்தி

தமிழ்நாடு

சி.முட்லூர் அரசு கல்லூரியில் தடுப்பூசி முகாம்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
கிள்ளை : சிதம்பரம் அடுத்த சி.முட்லுார் அரசு கலைக் கல்லுாரியில், செஞ்சிலுவை, செஞ்சுருள், என்.எஸ்.எஸ்., கிருஷ்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார மையம் மற்றும் காஸ்மோ பாலிட்டன் லயன் சங்கம் சார்பில் மாணவர்களுக்கு, கொரோனா தடுப்பூசிப் போடும் சிறப்பு முகாம் நடந்தது.கல்லுாரி முதல்வர் சாந்தி தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார். துறைத் தலைவர் மீனா முன்னிலை வகித்தார். திட்ட அலுவலர்

கிள்ளை : சிதம்பரம் அடுத்த சி.முட்லுார் அரசு கலைக் கல்லுாரியில், செஞ்சிலுவை, செஞ்சுருள், என்.எஸ்.எஸ்., கிருஷ்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார மையம் மற்றும் காஸ்மோ பாலிட்டன் லயன் சங்கம் சார்பில் மாணவர்களுக்கு, கொரோனா தடுப்பூசிப் போடும் சிறப்பு முகாம் நடந்தது.

கல்லுாரி முதல்வர் சாந்தி தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார். துறைத் தலைவர் மீனா முன்னிலை வகித்தார். திட்ட அலுவலர் ராஜாத்தி வரவேற்றார். வட்டார மருத்துவர் ஜானகிராமன் தலைமையில், சுகாதார ஆய்வாளர் குணசேகரன், தனசேகரன், சமுதாய செவிலியர் எழிலரசி ஆகியோர் 300க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, தடுப்பூசி போட்டனர்.

துறைத் தலைவர்கள் சேகர், ரவி, ரா.அறிவழகன், அறிவழகன் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.தடுப்பூசி போட்டுக்கொண்ட மாணவர்களுக்கு, காஸ்மோ பாலிட்டன் லயன் சங்க தலைவர் நாகராஜன், செயலர் விஜயசங்கர், பொருளாளர் வெங்கடேசன் ஆகியோர் ஸ்நாக்ஸ் வழங்கினர். திட்ட அலுவலர் சுடர்மதி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X