பொது செய்தி

தமிழ்நாடு

புத்தேரி பெருமாள் கோவிலில்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாடு நடந்தது.இதனை முன்னிட்டு, நேற்று காலை 9:00 மணியளவில் மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. மாலை 6:30 மணியளவில் பிரகாரத்தில் அலங்கரிக்கப்பட்ட கிருஷ்ணர் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், இரவு 7:00 மணியளவில் மகா தீபாராதனை
 புத்தேரி பெருமாள் கோவிலில்

பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாடு நடந்தது.

இதனை முன்னிட்டு, நேற்று காலை 9:00 மணியளவில் மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. மாலை 6:30 மணியளவில் பிரகாரத்தில் அலங்கரிக்கப்பட்ட கிருஷ்ணர் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், இரவு 7:00 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, உறியடி உற்சவம், வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 8:00 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ணர் சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.சிறுபாக்கம் சிறுபாக்கம் வரதராஜ பெருமாள் கோவிலில், நேற்று முன்தினம் இரவு சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று காலை சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. பின், மாலை 4:00 மணியளவில் வரதராஜ பெருமாள் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. இரவில் சுவாமி வீதியுலா நடந்தது. மாங்குளம், பொயனப்பாடி கிராமங்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X