பொது செய்தி

தமிழ்நாடு

விநாயகர் சிலை செய்யும் தொழிலாளர்கள் ஏமாற்றம் பொது இடங்களில் வழிபட தமிழக அரசு தடை

Added : ஆக 31, 2021
Share
Advertisement
விநாயகர் சதுர்த்தியையொட்டி ஆண்டுதோறும், திண்டிவனம் அடுத்த கிளாம்பாக்கம், ஆலம்பாக்கம், முனுார், கிளியனுார், மொரட்டாண்டி மற்றும் விழுப்புரம் அடுத்த அய்யூர் அகரம் கிராமங்களில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபடுவது வழக்கம்.இங்கு, அரை அடி முதல் 15 அடி உயரம் வரை மயில், அன்னம், சிங்கம், மாடு, மான், தாமரை ஆகியவை மீது விநாயகர் அமர்ந்திருப்பது, ஐந்துமுக
விநாயகர் சிலை செய்யும் தொழிலாளர்கள்  ஏமாற்றம்   பொது இடங்களில் வழிபட தமிழக அரசு தடை

விநாயகர் சதுர்த்தியையொட்டி ஆண்டுதோறும், திண்டிவனம் அடுத்த கிளாம்பாக்கம், ஆலம்பாக்கம், முனுார், கிளியனுார், மொரட்டாண்டி மற்றும் விழுப்புரம் அடுத்த அய்யூர் அகரம் கிராமங்களில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபடுவது வழக்கம்.

இங்கு, அரை அடி முதல் 15 அடி உயரம் வரை மயில், அன்னம், சிங்கம், மாடு, மான், தாமரை ஆகியவை மீது விநாயகர் அமர்ந்திருப்பது, ஐந்துமுக சிங்க விநாயகர், சிவலிங்க விநாயகர், கருட வாகன விநாயகர், கிருஷ்ண விநாயகர், சிவன், பார்வதி, முருகன் குடும்பத்தோடு இருப்பது போன்ற விநாயகர் என பல்வேறு வகைகளில் வடிவமைத்து விற்பனை செய்வர்.இந்த சிலைகள் அனைத்தும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் காகித கூழ், கிழங்கு மாவு மூலம் தயாரிக்கப்படுகிறது.

இதை நீர் நிலைகளில் கரைப்பதால் எவ்வித கெடுதலும் நேராது.இந்த சிலைகளை வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்தும் விழாக்குழுவினர் வாங்கிச் செல்வது வழக்கம்.இங்கு பிரம்மாண்ட சிலைகள் 3,000 ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.கொரோனா தொற்று தீவிரத்தையொட்டி அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கால் கடந்த ஆண்டு அய்யூர் அகரம் கிராமத்தில் செய்யப்பட்ட 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான விநாயகர் சிலைகள் தேக்கமடைந்தன

.இதில் சில தொழிலாளர்கள் அந்த சிலைகளை முழுதுமாக முடிக்காமல் பாதியிலேயே நிறுத்தி வைத்திருந்தனர். இதற்காக கடன் பெற்று அந்தக் கடனை தற்போது வரை திருப்பிச் செலுத்த முடியாமல் பல தொழிலாளர்கள் வறுமையில் உள்ளனர்.இந்த ஆண்டு, கொரோனா தாக்கம் குறைந்து வருவதைத் தொடர்ந்து, வாரம் தோறும் ஊரடங்கில் இருந்து படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் தமிழக அரசு, விநாயகர் சதுர்த்தி வழிபாட்டை நடத்துவதற்கு அனுமதி வழங்குமென விநாயகர் சிலைகளை தயாரிக்கும் தொழிலாளர்கள் ஆர்வத்தோடு காத்திருந்தனர்.இந்நிலையில் நேற்று, தமிழக அரசு, விநாயகர் சதுர்த்தி வழிபாட்டில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடக்கூடாது. வீடுகளில் வைத்து வழிபட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை சிலைகள் வைத்து வழிபட அரசு அனுமதி வழங்கும் என நம்பியிருந்தோம்.

ஆனால், அரசு பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கக் கூடாது என அறிவித்துள்ளது. பெரிய அளவிலான சிலைகள் பொது இடங்களில் வைத்துதான் பூஜை செய்வர். அதன்படி பெரிய சிலைகள் விற்பனையாகும். பொருளாதார ரீதியாக நாங்கள் கஷ்டத்தில் இருந்து மீள்வோம். கடந்த ஆண்டு செய்யப்பட்ட சிலைகளை முழு வடிவம் கொடுத்து விற்பனை செய்யலாம் என காத்திருந்த எங்களுக்கு அரசின் அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X