தமிழ்நாடு

வேப்பூர் தொழிற்பேட்டையில் தொழில் நிறுவனங்கள் துவக்க நடவடிக்கை தேவை கிராமங்கள் பொருளாதார வளர்ச்சியடைய அரிய வாய்ப்பு

Added : ஆக 31, 2021
Share
Advertisement
வேப்பூர் : வேப்பூர் அருகே சிட்கோ தொழிற்பேட்டையில் தொழில் நிறுவனங்களை துவக்க அரசு நடவடிக்கை எடுத்தால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து கடைக்கோடி கிராமங்கள் பொருளாதார வளர்ச்சியடையும். விருத்தாசலம், திட்டக்குடி சட்டசபை தொகுதிகளைச் சேர்ந்த கிராமங்கள், பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியுள்ளன. இப்பகுதியினர் வேளாண் தொழிலை பிரதானமாக செய்கின்றனர். மானாவாரி
 வேப்பூர் தொழிற்பேட்டையில் தொழில் நிறுவனங்கள் துவக்க   நடவடிக்கை தேவை  கிராமங்கள் பொருளாதார வளர்ச்சியடைய அரிய வாய்ப்பு

வேப்பூர் : வேப்பூர் அருகே சிட்கோ தொழிற்பேட்டையில் தொழில் நிறுவனங்களை துவக்க அரசு நடவடிக்கை எடுத்தால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து கடைக்கோடி கிராமங்கள் பொருளாதார வளர்ச்சியடையும். விருத்தாசலம், திட்டக்குடி சட்டசபை தொகுதிகளைச் சேர்ந்த கிராமங்கள், பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியுள்ளன.

இப்பகுதியினர் வேளாண் தொழிலை பிரதானமாக செய்கின்றனர். மானாவாரி பயிர்களான மக்காச்சோளம், பருத்தி, எள், மணிலா, சூரியகாந்தி மற்றும் நீர்ப்பாசன பயிர்களான கரும்பு, நெல், மரவள்ளி செடிகளை சாகுபடி செய்கின்றனர்.விருத்தாசலத்தில் செராமிக் தொழிற்பேட்டை, பெண்ணாடத்தில் சர்க்கரை மற்றும் சிமென்ட் ஆலைகள் மூலம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். பருவநிலை மாற்றத்தால் வேளாண் பொருட்களின் உற்பத்தி குறைந்து வருவதாலும், தொழில் நிறுவனங்கள் அதிகளவில் இல்லாததாலும் இப்பகுதி படித்த மற்றும் படிக்காத ஆண்கள், பெண்கள் வேலை தேடி வெளிநாடு, வெளி மாநிலங்களுக்கு செல்கின்றனர்.வேப்பூரில் சிட்கோகடந்த 2013ல் வேப்பூர் அடுத்த பெரியநெசலுாரில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்படும் என அரசு அறிவித்தது.

கடந்த 2016ல் கடலுார் - சேலம் சாலையில் 45 ஏக்கர் பரப்பளவில் 120 பிளாட்கள், சாலைகள், பூங்கா, நீர்த்தேக்க தொட்டியுடன் அமைக்கப்பட்டது. மேலும், 5 கி.மீ., தூரத்தில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையும், 25 கி.மீ., துாரத்தில் விருத்தாசலம் ரயில் நிலையமும் உள்ளது. தொழில் நிறுவனங்களின் பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதிக்கு சிறந்த போக்குவரத்து வசதியை கொண்டுள்ளது. ஆனால், அரசின் மெத்தனால் சிட்கோ தொழிற்பேட்டையில் தொழில் நிறுவனங்கள் துவக்கவில்லை. இதனால் சிட்கோ தொழிற்பேட்டையில் சாலைகள் சேதமடைந்து, பிளாட்களில் புதர்கள் மண்டியுள்ளது.

வேளாண்மைக்கு முக்கியத்துவம்
விருத்தாசலம், திட்டக்குடி சட்டசபை தொகுதியினர் வேளாண் தொழிலை அதிகளவில் செய்கின்றனர். எனவே சிட்கோவில் உணவு ஆயில், பால் பொருட்கள், இயற்கை உரம், குளிர்பதனம், கால்நடை தீவன உற்பத்தி, மின் மோட்டார் தொடர்பான உதிரி பாகங்கள், ரேடிமேட்ஸ் தயாரிப்பு உள்ளிட்ட நிறுவனங்கள் துவக்க முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.அதன் மூலம் படித்த மற்றும் படிக்காத ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவதுடன், வேளாண் தொழில் செய்யும் விவசாயிகளும் பயன் பெறுவர். இதனால், மாவட்டத்தின் கடைக்கோடி பகுதி மக்களின் பொருளாதாரமும் வளர்ச்சி அடையும். மக்கள் எதிர்பார்ப்பு விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென கால் நூற்றாண்டுகளாக இப்பகுதியினர் கோரிக்கை விடுகின்றனர்.

விருத்தாசலம் தேர்தல் பிரசாரத்தில், விருத்தாசலத்தை தனி மாவட்டம் உருவாக்கப்படுமென தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உறுதியளித்தார். இதனால், நடப்பு சட்டசபை கூட்டத்தில் மாவட்ட அறிவிப்பு வெளியாகுமா என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.விருத்தாசலம் மாவட்டம் உருவானால், நலிவடைந்து வரும் செராமிக் தொழிற்சாலை, கற்குழாய் தொழிற்சாலை, சூரியகாந்தி எண்ணெய் ஆலைக்கு புத்துயிர் அளித்து, தொழில் வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும். மேலும், வேப்பூரில் மக்காச்சோளம் கூழ் ஆலை துவங்க, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் கணேசன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X