மீனவர்கள் மோதல்: அமைச்சர்கள் ஆலோசனை | Dinamalar

பொது செய்தி

இந்தியா

மீனவர்கள் மோதல்: அமைச்சர்கள் ஆலோசனை

Added : ஆக 31, 2021
Share
புதுச்சேரி : மீனவர்கள் சுருக்கு வலையை பயன்படுத்துவது குறித்து, அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கடலில் சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பது தொடர்பாக வீராம்பட்டினம்- நல்லவாடு மீனவர்கள் இடையே இரண்டு நாட்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக சுமூக தீர்வு காண, மீன்வளத்துறை அமைச்சர் அலுவலகத்தில், ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. உள்துறை
 மீனவர்கள் மோதல்: அமைச்சர்கள் ஆலோசனை

புதுச்சேரி : மீனவர்கள் சுருக்கு வலையை பயன்படுத்துவது குறித்து, அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கடலில் சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பது தொடர்பாக வீராம்பட்டினம்- நல்லவாடு மீனவர்கள் இடையே இரண்டு நாட்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது.

இது தொடர்பாக சுமூக தீர்வு காண, மீன்வளத்துறை அமைச்சர் அலுவலகத்தில், ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், மீனவர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமை தாங்கினர். கூட்டத்தில், வீராம்பட்டினத்தை சேர்ந்த கிராம நிர்வாகிகள், காவல் துறை அதிகாரிகள், மீன்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்திற்கு பின்னர் அனைவரும் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X