தமிழ்நாடு

அலங்காலநல்லூர் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவங்குமா?

Updated : ஆக 31, 2021 | Added : ஆக 31, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை மாவட்டத்தில் இரண்டாயிரம் ஏக்கரில் கரும்பு பயிரிட்டுள்ளதால், அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில், இந்தாண்டாவது கரும்பு அரவை துவக்கப்படுமா என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். அரவை துவங்காததால், கரும்பு பயிரிடும் பரப்பளவு குறைந்து வருகிறது.இந்த ஆலையில் ஏற்கனவே அரவை செய்த கரும்புக்குரிய பாக்கியை விவசாயிகளுக்கு வழங்குவதில் இழுபறி நீடித்தது.
அலங்காலநல்லூர் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவங்குமா?

மதுரை : மதுரை மாவட்டத்தில் இரண்டாயிரம் ஏக்கரில் கரும்பு பயிரிட்டுள்ளதால், அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில், இந்தாண்டாவது கரும்பு அரவை துவக்கப்படுமா என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். அரவை துவங்காததால், கரும்பு பயிரிடும் பரப்பளவு குறைந்து வருகிறது.



இந்த ஆலையில் ஏற்கனவே அரவை செய்த கரும்புக்குரிய பாக்கியை விவசாயிகளுக்கு வழங்குவதில் இழுபறி நீடித்தது. இதனால் கரும்பு பயிரிடும் பரப்பு குறைந்து இரு ஆண்டுகளாக ஆலையில் கரும்பு அரவை நடக்கவில்லை. மேலும் கொரோனா ஊரடங்கால் ஆலை நிர்வாகிகளும் கண்டுகொள்ளவில்லை. ஆலை தொழிலாளர்கள் மாற்று பணிக்கு அனுப்பப்பட்டனர்.

கரும்பு விவசாயிகள் நீதிமன்றத்தை அணுகினர். நீதிமன்றம் உத்தரவால் கடந்தாண்டு பாக்கி தொகை ரூ.20 கோடிக்கு மேல் விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்யப்பட்டது. மேலும் பருவமழை கை கொடுத்ததாலும், பெரியாறு, வைகை அணைகளிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதாலும் மீண்டும் விவசாயிகள் கரும்பு பயிரிடுவதில் ஆர்வம் காட்டினர்.

இந்தாண்டு இதுவரை மாவட்டத்தில் 2 ஆயிரம் ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டு ஆலையில் பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டாவது ஆலையில் அரவையை துவக்க வேண்டும் என சமீபத்தில் நடந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பழனிசாமி தலைமையில் விவசாயிகள் அமைச்சர் மூர்த்தியிடம் நேற்று மனு வழங்கினர்.

அவர்கள் கூறுகையில், 'இந்தாண்டாவது அரவையை துவக்க ஏதுவாக மாற்று பணிக்கு அனுப்பப்பட்ட தொழிலாளர்களை ஆலை நிர்வாகம் திரும்ப பெற வேண்டும். ஆலையை துவங்க அரசு வழிவகைகடன் ரூ.10 கோடி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

ஆலை நிர்வாகி ஒருவர் கூறுகையில், ''ஒரு நாளைக்கு குறைந்தது 1800 டன் கரும்பு வந்தால் தான் ஆலையில் அரவையை தொடர்ந்து நடத்த முடியும். தற்போது வரை 50 ஆயிரம் டன் வரை தான் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ஆலையில் அரவையை துவக்க முயற்சித்து வருகிறோம்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X