தமிழ்நாடு

அ.தி.மு.க., ஆட்சியில் கூட்டப்படாத பேரிடர் மேலாண்மை குழு கூட்டம்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
மதுரை : முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் பேரிடர் மேலாண்மை குழு கூட்டம் கூட்டப்படவில்லை என மதுரையில் நடந்த மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை அலுவலர் மற்றும் தல்லாகுளம் தீயணைப்பு நிலையம் புதிய கட்டடம் திறப்பு விழாவில் அமைச்சர் தியாகராஜன் குற்றம் சாட்டினார்.இந்த அலுவலகங்களை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்தார். மதுரையில் நடந்த விழாவில் அமைச்சர்கள்

மதுரை : முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் பேரிடர் மேலாண்மை குழு கூட்டம் கூட்டப்படவில்லை என மதுரையில் நடந்த மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை அலுவலர் மற்றும் தல்லாகுளம் தீயணைப்பு நிலையம் புதிய கட்டடம் திறப்பு விழாவில் அமைச்சர் தியாகராஜன் குற்றம் சாட்டினார்.

இந்த அலுவலகங்களை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்தார். மதுரையில் நடந்த விழாவில் அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், கலெக்டர் அனீஷ்சேகர், டி.ஆர்.ஓ., செந்தில்குமாரி, தீயணைப்பு துறை மண்டல துணை இயக்குனர் விஜயகுமார், மாவட்ட அலுவலர் வினோத், பி.ஆர்.ஓ., சாலி தளபதி, உதவி அலுவலர் வினோத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அமைச்சர் தியாகராஜன் கூறியதாவது:

பேரிடர் எப்போது வரும் என கூற முடியாது. பேரிடர் வாய்ப்பை குறைப்பது அரசின் கடமை. பேரிடர் நடந்த பின் உடனடியாக நடவடிக்கை எடுத்து பாதிப்புகளை களைய வேண்டும். 2015ல் சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறித்து தணிக்கை குழு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதில் பல முக்கிய தகவல்கள் உள்ளன.மாநில பேரிடர் குழு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூடி ஆய்வு செய்து, முறையான பேரிடர் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா என கண்காணிக்க வேண்டும்.

2012 முதல் 2015 வரை முந்தைய ஆட்சியில் பேரிடர் மேலாண்மை குழு கூட்டப்படவில்லை. 2018 ல் மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து நிகழ்ந்தது. தற்போது வரை அதுகுறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. மூன்றாண்டுகளாகியும் அந்த பணிகள் முடிவடையவும் இல்லை. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு முதல்வர் ஸ்டாலின், தலைமை செயலர் இறையன்பு பேரிடர் மேலாண்ணையில் தனி கவனம் செலுத்தி வருகின்றனர்.

பழமையான நகரில் பழமையான கட்டடங்களால் விபத்து நடக்க வாய்ப்புகள் உள்ளன. பல கட்டடங்கள் முறையான அனுமதி பெற்று கட்டப்படுகின்றனவா என கண்காணிக்க வேண்டியுள்ளது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X