பொது செய்தி

தமிழ்நாடு

எல்லை பிரச்னையால் திணறும் கப்பலுார் ஊராட்சி

Added : ஆக 31, 2021
Share
Advertisement
திருமங்கலம் : திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கப்பலுார் ஊராட்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த ஊராட்சியில் கப்பலுார், சொக்கநாதன்பட்டி கிராமங்கள் அடங்கியுள்ளன.இந்த ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை சொக்கநாதன்பட்டி ரோட்டில் உள்ள பாழடைந்த குவாரியில் உள்ள ஊரணி அருகே கொட்டப்படுகிறது. ஊரணி உள்ள இடம் உச்சப்பட்டி ஊராட்சிக்கும் அதற்கு

திருமங்கலம் : திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கப்பலுார் ஊராட்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த ஊராட்சியில் கப்பலுார், சொக்கநாதன்பட்டி கிராமங்கள் அடங்கியுள்ளன.

இந்த ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை சொக்கநாதன்பட்டி ரோட்டில் உள்ள பாழடைந்த குவாரியில் உள்ள ஊரணி அருகே கொட்டப்படுகிறது. ஊரணி உள்ள இடம் உச்சப்பட்டி ஊராட்சிக்கும் அதற்கு அடுத்துள்ள ரோடு மற்றும் பகுதிகள் கப்பலுார் ஊராட்சிக்கும் வருகின்றன.எல்லை பிரச்னை காரணமாக இரண்டு ஊராட்சிகளும் எதுவும் செய்யாமல் குப்பை கொட்டும் இடத்தை அப்படியே விட்டு விட்டதால் அந்த பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

காற்றில் குப்பை அருகில்்உள்ள குடியிருப்புக்கள், ஓட்டல்களுக்கு செல்கிறது. பழைய கல் குவாரி ஊரணி அழுக்கடைந்து கொசு உற்பத்தி மையமாகஉள்ளது. கப்பலுார் கடைசி பகுதியில் குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்பட்டு ஓராண்டு ஆகியும் இதுவரை பயன்படுத்தப்படவே இல்லை.கப்பலுார் மேம்பாலத்திற்கு கீழ் ஊரின் இரண்டு பகுதி மக்களும் கடந்து செல்வதற்காக சிறிய பாலம் உள்ளது. அதில் மின் விளக்குகள் ஏதும் அமைக்கப்படாததால் இரவில் கடும் இருள் சூழ்ந்திருப்பதால் பொதுமக்கள் அச்சத்துடன் கடக்கின்றனர்.

அங்குள்ள நுாலகம் போதிய பராமரிப்பின்றி மேற்கூரை இடியும் நிலையில் உள்ளது. அதேபோல் இந்த ஊராட்சி முழுவதும் அமைக்கப்பட்ட சாலைகள்உரிய பராமரிப்பின்றி கற்கள் பெயர்ந்துள்ளன. பல இடங்களில் மின்கம்பங்கள் துருப்பிடித்து சேதமடைந்து விழும் நிலையில் உள்ளன. பொது குளியல் தொட்டி சில ஆண்டுகளாகவே பராமரிப்பின்றி பாழடைந்து உள்ளது.

முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் ஜெயசீலன்:குப்பை பல ஆண்டுகளாக இங்கு கொட்டப்படுவதால் மக்கள் தொற்று நோய்க்கு ஆளாகும் நிலை உள்ளது. குப்பை சேகரிக்க தரம் பிரிக்க தனி இடம் ஒதுக்கப்படும் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ஊராட்சி தலைவர் கண்ணன்: குப்பை சேகரித்து தரம் பிரிக்க தனியாக இடம் ஆரம்பிக்கப்பட்டு இருந்தாலும்அதில் பணியாற்ற ஊழியர்கள் இல்லாமல் இருந்தனர். தற்போது புதிதாக ஆறு துாய்மை பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தெருநாய்களை கட்டுப்படுத்தவும் அவற்றை பிடித்து வேறு இடங்களில் விடவும் உரிய அனுமதி கிடைக்கவில்லை.

விரைவில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் நோய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஊராட்சியில் போதிய நிதி இல்லாததால் சில தெருக்கள்,கட்டடங்களை பராமரிக்க இயலாத சூழ்நிலை உள்ளது. எனவே அவற்றை பராமரிக்க மாவட்ட நிர்வாகத்தின் உதவி கோரப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X