போலீஸ் செய்திகள்;

Added : ஆக 31, 2021
Share
Advertisement
மாடுகளை திருடியவர் கைதுமதுரை: யாகப்பா நகர் கருப்பசாமி 45. இவரது 15 பசு மாடுகளை அருகில் வசிக்கும் மோகன் 21, திருடியதாக கைது செய்யப்பட்டார்.சிறுமி கர்ப்பம்; டிரைவர் கைதுவாடிப்பட்டி: சமயநல்லுார் பகுதி சசிகுமார் 40, டிரைவர். மனைவி, மகன், மகள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்து மிரட்டினார். அவரை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாதேவி 'போக்சோ'

மாடுகளை திருடியவர் கைது

மதுரை: யாகப்பா நகர் கருப்பசாமி 45. இவரது 15 பசு மாடுகளை அருகில் வசிக்கும் மோகன் 21, திருடியதாக கைது செய்யப்பட்டார்.

சிறுமி கர்ப்பம்; டிரைவர் கைது

வாடிப்பட்டி: சமயநல்லுார் பகுதி சசிகுமார் 40, டிரைவர். மனைவி, மகன், மகள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்து மிரட்டினார். அவரை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாதேவி 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தார்.

வைக்கோல் படப்பில் தீ

மேலுார்: பனங்காடியில் விவசாயி கண்ணனின் ஆறு வைக்கோல் படப்புகளில் நேற்று அடுத்தடுத்து தீப்பிடித்தது. மேலுார் தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரத்திற்கு மேல் போராடி அணைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

இறப்பில் சந்தேகம்: தாய் புகார்

வாலாந்துார்: ஜோதிமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலையரசன் 35. ஆட்டோ டிரைவரான இவர் ஊருக்கு அருகில் உள்ள கண்மாய்கரை புளியமரத்தில் துாக்கிட்டு இறந்த நிலையில் இருந்தார். அவரது சாவில் சந்தேகம் உள்ளதாக தாய் செல்வரசி புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

ஆடு திருடியவர்கள் கைது

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் அருகே பண்ணைகுடி செல்லபாண்டி 63, நேற்று மாலை அங்கு மேய்ந்த இவரது ஆடுகளை திருட முயன்ற மதுரை டி.ஆர்.ஓ., காலனி பெரிய தினேஷ் 20, 17 வயது சிறுவனை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இருவரையும் கைது செய்த போலீசார் டூவீலரை பறிமுதல் செய்தனர்.

வீட்டில் திருட்டு

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் அருகே ரங்கராஜபுரம் கோபாலகிருஷ்ணன் 43. இறைச்சிக்கடை வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் வெளியூர்சென்றநிலையில், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 3 பவுன் நகை, மடிக்கணினி, குத்துவிளக்கு, பூஜை பொருட்கள் திருடப்பட்டது. போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X