மகளிர் வாலிபால் மாநில போட்டி; மீனாசுந்தரி அணி முதலிடம்| Dinamalar

மகளிர் வாலிபால் மாநில போட்டி; மீனாசுந்தரி அணி முதலிடம்

Added : ஆக 31, 2021
Share
மகளிருக்கான மாநில அளவிலான மீனாசுந்தரி நினைவு வாலிபால் போட்டி மதுரை மங்கையர்க்கரசி கல்லுாரியில் நடந்தது. இதில் மீனாசுந்தரி அணி முதலிடம் பெற்றது.மொத்தம் 22 அணிகள் லீக் மற்றும் நாக்அவுட் முறையில் பங்கேற்றன. மதுரை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செங்கதிர் போட்டிகளை துவக்கி வைத்தார். லீக் போட்டிக்கு எம்.கே.கே. கிளப், அமெரிக்கன் கல்லுாரி அணி, மீனாசுந்தரி அணி, மங்கையர்க்கரசி

மகளிருக்கான மாநில அளவிலான மீனாசுந்தரி நினைவு வாலிபால் போட்டி மதுரை மங்கையர்க்கரசி கல்லுாரியில் நடந்தது. இதில் மீனாசுந்தரி அணி முதலிடம் பெற்றது.மொத்தம் 22 அணிகள் லீக் மற்றும் நாக்அவுட் முறையில் பங்கேற்றன.

மதுரை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செங்கதிர் போட்டிகளை துவக்கி வைத்தார். லீக் போட்டிக்கு எம்.கே.கே. கிளப், அமெரிக்கன் கல்லுாரி அணி, மீனாசுந்தரி அணி, மங்கையர்க்கரசி கல்லுாரி அணி, தேனி எஸ்.டி.ஏ.டி அணி மற்றும் நெல்லை எஸ்.ஏ.சி.அணிகள் தகுதி பெற்றன.

முதல் லீக் போட்டியில் எம்.கே.கே. அணி 25-14, 25-17 செட்களில் எஸ்.டி.ஏ.டி. அணியை வீழ்த்தியது. 2வது போட்டியில் மீனாசுந்தரி அணி 25-9, 25-10 செட்களில் மங்கையர்க்கரசி அணியை வீழ்த்தியது. 3வது போட்டியில் எஸ்.ஏ.சி. அணி 22-25, 25-14, 25-16 செட்களில் மங்கையர்க்கரசி அணியை வீழ்த்தியது. 4வது போட்டியில் அமெரிக்கன் கல்லுாரி 25-22, 25-18 செட்களில் எஸ்.டி.ஏ.டி.யை வீழ்த்தியது.

5வது போட்டியில் அமெரிக்கன் கல்லுாரி 25-16,20-25, 25-17 செட்களில் எம்.கே.கே அணியை வீழ்த்தியது. இறுதிப் போட்டியில் மீனாசுந்தரி அணி 23-25, 25-20 25-21 செட்களில் அமெரிக்கன் கல்லுாரியை வீழ்த்தி வெற்றி பெற்றது. எம்.கே.கே. அணி, எஸ்.ஏ.சி அணிகள் 3வது, 4வது இடம் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு முறையே ரூ.6000, ரூ.5000, ரூ.4000, ரூ.3000 பரிசுகளை வேளாண் இணை இயக்குனர் விவேகானந்தன், ஜோதி செந்தில்வேல்முருகன், வைகுந்த் சிங், செல்வகணேஷ் வழங்கினர்.

மீனாசுந்தரி அறக்கட்டளை தலைவர் கணேசன், செயலாளர் ஈஸ்வரன், பொருளாளர் அழகுபாண்டி ஏற்பாடுகளை செய்தனர்.


டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி


தென் மண்டல அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி திருநெல்வேலியில் நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் மதுரை டேக்வாண்டோ அகாடமி மாணவர்கள் 7 தங்கம், 8 வெள்ளி,11 வெண்கல பதக்கம் வென்றனர்.

சண்டை பிரிவில் ஸ்ரீ ஹரி, நரேன், செல்லப்பாண்டி, விஜய் சங்கர், கிருஷ்ணா கௌஷிக், நவீன்குமார், வைஷ்ணவி தங்கப்பதக்கம் வென்றனர். கிருஷ்ணகுமார், கீர்த்தி வாசன், ரூபகுமார், அஸ்வின் சாமுவேல், முகமது பிலால், விஷ்ணுப்பிரியன், சிலம்புவேல் வெள்ளி பதக்கம் வென்றனர். பைசல், அஜய்குமார், சாஜித், செந்தில்முருகன், மணி, மானசா, ராகவி, தருண், லோகித், அர்தியக்கிஸ், சபரி, ஆரியன் வெண்கல பதக்கம் வென்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களை தலைமை பயிற்சியாளர்நாராயணன்,பயிற்சியாளர்கள் பிரகாஷ் குமார், ரகுராமன், கார்த்திக், சஞ்சீவ், விஜய் பாராட்டினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X