ராஜராஜன் கல்வியியல் கல்லூரியின் 12வது பட்டமளிப்பு விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ராஜராஜன் கல்வியியல் கல்லூரியின் 12வது பட்டமளிப்பு விழா

Added : ஆக 31, 2021
Share
காரைக்குடி : அமராவதிபுதுார் ராஜராஜன் கல்வியியல் கல்லுாரியின் 12வது பட்டமளிப்பு விழா, தமிழ்ப்பண்பாட்டு மைய திறப்பு விழா நடந்தது.அழகப்பா பல்கலை., முன்னாள் துணைவேந்தர் சுப்பையா தலைமையேற்றார். தேசிய நல்லாசிரியர் கவிஞர்.மூர்த்தி வாழ்த்தினார். குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தமிழ்ப்பண்பாட்டு மையத்தை தொடங்கி வைத்தார்.இதில், ஓலைச்சுவடிகள், பழங்கால பாரம்பரிய மண்பாண்ட

காரைக்குடி : அமராவதிபுதுார் ராஜராஜன் கல்வியியல் கல்லுாரியின் 12வது பட்டமளிப்பு விழா, தமிழ்ப்பண்பாட்டு மைய திறப்பு விழா நடந்தது.

அழகப்பா பல்கலை., முன்னாள் துணைவேந்தர் சுப்பையா தலைமையேற்றார். தேசிய நல்லாசிரியர் கவிஞர்.மூர்த்தி வாழ்த்தினார். குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தமிழ்ப்பண்பாட்டு மையத்தை தொடங்கி வைத்தார்.இதில், ஓலைச்சுவடிகள், பழங்கால பாரம்பரிய மண்பாண்ட பொருட்கள், விவசாயக் கருவிகள், ஓவியங்கள், அணிகலன்கள், பழங்கால வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் சேகரித்து காட்சிக்காக வைக்கப்பட்டிருந்து.

தொடர்ந்து ராஜராஜன் கல்வியியல் கல்லுாரி இருபாலர் மற்றும் மகளிர் கல்வியியல் கல்லுாரி பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் சிவக்குமார் அறிமுகம் செய்தார்.மாணவ,மாணவிகளுக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகள், முன்னாள் துணைவேந்தர் சுப்பையா பட்டங்களை வழங்கினர். தமிழ்பண்பாட்டு மைய இயக்குநர் பெரியநாயகி வரவேற்றார். இணை இயக்குநர் லெட்சுமி நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X