பொது செய்தி

தமிழ்நாடு

நூறுநாள் வேலை திட்டத்தில் மூலப்பொருள் பாக்கித்தொகை 70 சதவீத நிதி விடுவிப்பு

Added : ஆக 31, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் நுாறு நாள் வேலை திட்டத்தில் மூலப்பொருட்கள் வாங்கிய வகைக்கு நுாறு கோடி ரூபாய் வரை வழங்கப்படாமல் இருந்தது. இதில் 70 சதவீத நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டத்தில் 12 ஒன்றியங்களில் 445 ஊராட்சிகளில் நுாறு நாள் வேலை திட்டத்தின் கீழ் வளர்ச்சிப்பணிகள் நடந்து வந்தது. பணியாளர்களுக்கு கூலி முழுமையாக வழங்கப்பட்ட நிலையில் பணிகளுக்கான

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் நுாறு நாள் வேலை திட்டத்தில் மூலப்பொருட்கள் வாங்கிய வகைக்கு நுாறு கோடி ரூபாய் வரை வழங்கப்படாமல் இருந்தது. இதில் 70 சதவீத நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் 12 ஒன்றியங்களில் 445 ஊராட்சிகளில் நுாறு நாள் வேலை திட்டத்தின் கீழ் வளர்ச்சிப்பணிகள் நடந்து வந்தது. பணியாளர்களுக்கு கூலி முழுமையாக வழங்கப்பட்ட நிலையில் பணிகளுக்கான மூலப்பொருட்கள் வாங்கியதற்கு நுாறு கோடி ரூபாய் வரை வழங்கப்படாமல் இருந்து வந்தது. இதனால் ஊராட்சிகளில் வளர்ச்சிப்பணிகளில் தொய்வு ஏற்பட்டது.ஊராட்சித்தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் மூலப்பொருட்கள் வாங்கிய நுாறு கோடி ரூபாயை விடுவிக்க வேண்டும், என அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந் நிலையில் மூலப்பொருட்கள் வாங்கியதில் உள்ள பாக்கித்தொகையில் 70 சதவீதம் வரை நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊராட்சி நிர்வாகத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஊாட்சித்தலைவர்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர் வெங்கடேசன் தெரிவித்ததாவது: நுாறு நாள் வேலை திட்டத்தில் மூலப்பொருட்கள் வாங்கியதில் பாக்கித்தொகை வழங்கப்படாமல் இருந்தது. தற்போது அரசு 70 சதவீதம் வரை நிதியினை விடுவித்துள்ளது. ஊராட்சிகளில் சுமை குறைந்துள்ளது. இனி வரும் காலங்களில் தாமதம்இன்றி நிதி விடுவிக்கப்பட வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X